சென்னை உயர்நீதி மன் றத்தில் வழக்குரைஞர் பி.புக ழேந்தி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனு வில் கூறியிருப்பதாவது:---
உரிமைகள்
குமாரி மாதுரி பட் டேல் வழக்கில், போலி ஜாதிச் சான்றிதழ் மூலம், எஸ்.சி., எஸ்.டி. உள் ளிட்ட இடஒதுக்கீட்டு சமுதாயத் தினரின் உரிமைகளை தடுக் கவோ, பறிக்கவோ கூடாது.
எனவே, ஒவ்வொரு மாநிலமும் எஸ்.டி. சான் றிதழ் சரிபார்த்து வழங்க மாநில அளவிலான ஆய் வுக்குழுவை அமைக்க வேண்டும் என்று உத்தர விட்டது. இதன்படி தமிழ் நாடு ஜாதிச் சான்றிதழ் சரி பார்க்கும் மாநில அளவி லான ஆய்வுக்குழு அமைக் கப்பட்டது. ஆனால், நிரந் தர ஆய்வுக் குழுவை அமைக் காமல், தற்காலிகள ஆய்வுக் குழுவை அமைத்துள்ளது.
இதனால், கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 3,251 எஸ்.டி. ஜாதிச் சான்றி தழ்கள், இந்த ஆய்வுக்குழு சரி பார்ப்பதற்கான 10 ஆண் டுகளுக்கும் மேலாக நிலு வையில் உள்ளன என்பது தெரியவந்தது.
நிரந்தர குழு
உச்சநீதிமன்ற தீர்ப் பின்படி, இந்த ஜாதிச் சான் றிதழ் விரைவாக சரி பார்த்து சம்பந்தப்பட்ட வர்களுக்கு வழங்க வேண் டும். எனவே, நிரந்தர ஆய்வுக்குழுவை அமைக்க தமிழ்நாடு அர சுக்கு உத்தரவிட வேண் டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர் வாலா, நீதிபதி டி.பரத சக்கர வர்த்தி ஆகியோர் முன்பு விசாணைக்கு வந்தது. மனு தாரர் தரப்பில் வழக்குரை ஞர் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார்.
அரசு தரப்பில், நிரந் தர கமிட்டி அமைத்து ஆதிதி ராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை செயலா ளர் லட் சுமி பிரியா பிறப்பித் துள்ள அரசாணையை நீதி பதிகளிடம் தாக்கல் செய்யப் பட்டது.
முடித்து வைப்பு
அந்த அரசாணையில், “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் (லட்சுமிபிரியா) தலைமையில் ஒரு ஆய்வுக்குழு, எஸ்.பூரணி தலைமையில் 2ஆவது ஆய் வுக்குழு, வி.மனோகரன் தலைமையில் 3ஆவது ஆய் வுக்குழு அமைக்கப்பட்டுள் ளது. இந்த குழுக்களில் உறுப்பினர் செயலராக பிரி யதர்சினியும், 3 குழுவுக்கும் ஒரு உறுப்பினர் வீதம் ஊட் டியைச் சேர்ந்த பழங்குடி மக்கள் ஆய்வு மய்யத்தின் இயக்குநர் எஸ்.உதயகுமார், பாண்டியராஜ், பி.தமிழ்ஒலி ஆகியோர் நிய மிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாநில ஆய்வுக் குழு நிரந்தரமாக செயல் பட்டு எஸ்.டி. ஜாதிச் சான்றிதழை சரிபார்க்க மாநில அளவில் நிரந்தர ஆய்வுக்குழுக்கள் அமைப்பு. உயர்நீதிமன்றத் தில், தமிழ்நாடு அரசு தக வல்களை சரிபார்க்கும்.
அதுதவிர ஜாதிச் சான்றிதழ் சரி பார்க்க 4 ஆய்வுக் குழுக்களும் தனி யாக அமைக்கப்பட்டுள்ளன” என்று கூறப்பட் டுள்ளது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment