சமீபத்தில் புகழ்மிக்க scroll.in என்ற வலைதளத்தில் 1950களின் இறுதியில் சென்னை திருவல்லிக்கேணியில், முரளி பிராமணாள் கஃபே என்ற பெயரையும், அதன் ஆதிக்கத்தையும் எதிர்த்துத் தந்தை பெரியார் ஆரம்பித்த போராட் டம் பற்றிய வரலாற்றைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அந்த வர லாற்றுப் பதிவை Dravida Insight என்ற டிவிட்டர் வலைத்தளத்தில் மறு பதிவு செய்ததை வாசிக்க முடிந்தது. சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டின் தலைநகரமான சென் னையில் ஒடுக்குமுறை எவ்வாறெல்லாம் நிலவியது என்பதை வாசிக்கும்போது நெருடலாக இருந்தது.
ஜாதிய அடையாளத்தை ஒழிக்க தந்தை பெரியார் பலவிதங்களில் போராட் டத்தை முன்னெடுத்து நடத்தினார் என்பதை நாம் அறிவோம். குறிப்பாக, நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் பெயர் பலகைகளில் ஜாதிய அடையா ளங்கள், தனி நபர்கள் பெயர்களின் பின்னால் ஜாதியைக் குறிப்பிட்டு எழுது தல் எல்லாம் இருக்கக்கூடாது என்பதை முன்னெடுத்துப் பல போராட்டங்களை நடத்தினார். அதன் தாக்கம் மற்றும் மாற்றங்களை நாம் இன்று பார்க்கிறோம், பெருமிதம் அடைகிறோம். தற்போதும் இந்தியாவின் பல மாநிலங்களில் பெயரு டன் தங்கள் ஜாதிப் பெயரையும் இணைப் பது வழக்கமாக உள்ளது. ஆனால் தமிழ் நாட்டில் அப்படி ஒரு நிலை இல்லை. அதற்குக் காரணம் தந்தை பெரியார்.
தமிழ்நாட்டின் தலைநகரான சென் னையின் மய்யப்பகுதியில் இருப்பது திருவல்லிக்கேணி. இங்குள்ள பிரதான சாலையில் முரளி கஃபே என்ற உண வகம் இன்றும் இருப்பதை நாம் அறி வோம். 1950ஆம் ஆண்டு இந்த உண வகம் “முரளிஸ் பிராமணாள் கஃபே” என்ற பெயர்ப் பலகையைத் தாங்கி நின் றது. ஜாதிய அடையாளத்தை எதிர்த்த தந்தை பெரியார், வர்ணாசிரமம் என அழைக்கப்பட்டு மக்களைப் படிநிலைப் படுத்தும் ஆதிக்கம் பிராமணாள் கஃபே என்ற பெயரில் மேலோங்குவதை உணர்ந்து அந்த உணவகத்தை எதிர்த் துத் தொடர் போராட்டத்தை ஆரம்பித் தார். இதில் முக்கியமானது பிராமணாள் என்பது ஜாதியின் பெயர் அல்ல வர் ணத்தின் அடையாளம்.
“What is there in a name?, பெயரில் என்ன இருக்கிறது?” என்று நாம் எளிதாக நினைத்துப் புறம் தள்ளி விடலாம். ஆனால் பிராமணாள், பிரா மின் என்பதெல்லாம் ஓர் ஆதிக்கத்தின் குறியீடாகும். இந்த முரளி பிராமணாள் கஃபே உணவகத்தில் 1950களில் பிராம ணர்களுக்கு பரிமாறப்படும் உணவு களுக்குத் தனிப்பட்ட பாத்திரங்களும், சாப்பிடுவதற்குத் தனியான இடமும் ஒதுக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் அமர்ந்து உணவருந்த, தேநீர் குடிக்க, காபி குடிக்க தனி இடம் ஒதுக்கப்பட்டது. மேலும் தாழ்த்தப்பட்டோர் அந்த உண வகத்துக்குள் நுழையக்கூட அனுமதி இல்லை. இந்த ஜாதியக் கொடுமையை, வர்ணாசிரமத்தின் ஒரு கட்டமைப்பை வெளிப்படையாக அங்கே நிலைநாட்ட முயற்சித்த ஓர் உணவகம்தான் முரளி பிராமணாள் கஃபே. இதனைக் கடுமை யாக எதிர்த்தார் தந்தை பெரியார்.
திராவிடர் கழக செயல் வீரர்களோடு தொடர் போராட்டம் நடத்தி, இதனை ஒரு மாநிலம் தழுவிய பிரச்சினையாக எழுப்பி, “பெயரை மாற்றுவதோடு மட்டு மல்லாமல் அந்த உணவகத்தில் இது போன்ற கொடுமைகளை உடனே களைய வேண்டும், இல்லையென்றால் விபரீதமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று போராட்டத்தை உச்சக் கட்டத்திற்குக் கொண்டு சென்றார் தந்தை பெரியார். அன்றைய காலத்தில் இது சட்டமன்ற விவாதமானது. திரு.ராஜாஜி அது வர்ணத்தின் அடையாளம் எனப் பார்க்காமல் சுத்தம், சுவை மற்றும் பாரம்பரியத்தை பிராமணாள் குறிக்கும் என சொன்னார். வெகுண்டு எழுந்த பெரியார் தினம் 100 பேர் “முரளி பிராம ணாள் கஃபே” முன்னர் திரண்டு எதிர்ப்பு முழக்கத்தை எழுப்ப செய்தார். பலர் கைது செய்யப்பட்டும் போராட்டம் குறை யாமல் தீவிரமானது தான் உண்மை.
போராட்டத்தின் உக்கிரத்தையும், பின்னாட்களில் அது தரக்கூடிய விளை வுகளையும் எண்ணிப் பயந்த உணவக உரிமையாளர்கள் தங்கள் நிலைப்பாடு களை மாற்றிக்கொண்டு பெயர்ப்பலகை யையும், அந்த நிறுவனத்தில் நடந்து கொண்டிருந்த ஏற்றத்தாழ்வு ஒடுக்கு முறையையும் கைவிட்டனர். இதனை அவர்களைச் செய்ய வைத்தது தந்தை பெரியாரின் சாதனைகளில் ஒன்றாகும். இந்தச் சாதனையின் தாக்கம் எல்லா சமுதாயத்தின் மீதும் படர, தமிழ்நாட்டில் பரவலாக ஏற்றத்தாழ்வுகளை வெளிப் படுத்தும் இதுபோன்ற செயல்பாடுகள் பெருமளவு குறைந்தன.
ஒரு காலத்தில் சைவ உணவகம் என்றால் அவாள்தான் நடத்த வேண்டும், அவர்களால்தான் நடத்த முடியும் என்ற மனப்போங்கை மாற்ற இந்தப் போராட் டமும், இதன் முன்னெடுப்புகளும் வழிவகுத்தன. கடந்த 50 ஆண்டுகளில் பல சமூகத்தை சேர்ந்தவர்கள் சைவ உணவகங்கள் துவங்கினர், உலக அளவில் பல கிளைகளை அமைத்துக் கொண்டனர். இன்று அந்த மாயை மறைந்து மனித நேயம் தழைக்கிறது. தற்போது பல வடகிழக்கு மாநிலத்தவர் இவ்வுணவகங்களில் பணியாற்றுவதை யும் பார்க்கிறோம்.
சமீபத்தில் அடையாறு ஆனந்த பவனின் உரிமையாளர் பேட்டி ஒன்றில் தந்தை பெரியாரை மேற்கோள் காட்டி, “நாங்களெல்லாம் சைவ உணவகத் தொழில் முனைவோராக மாறுவதற்கு தந்தை பெரியாரும் ஒரு காரணம்” எனப் பெருமையாகக் குறிப்பிட்டார். அடை யாறு ஆனந்த பவன் நிறுவனர் குறிப் பிட்டதைத் தமிழர்கள் பலர் ஏற்க, பாஜக வினரும், சங்கிகளும், “இவர் இப்படிப் பேசுகிறார். நாம் A2B என்றழைக்கப் படும் அடையாறு ஆனந்த பவனை நிராகரிக்க வேண்டும். அங்கு சென்று உணவு உண்ணக்கூடாது.” என்ற மலி வான நிலைப்பாட்டை பகிரங்கமாக சமூக ஊடகத்தில் வெளிப்படுத்துகின் றனர். இதன்மூலம் அவர்களது மன நிலையை அறியமுடிகிறது.
தந்தை பெரியார் வகுத்த பகுத்தறிவு சிந்தனை, சமூக நீதி மற்றும் பெண்ணுரி மைக் கோட்பாடுகள் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக அமைவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்துள் ளது. இன்று குலத்தொழில் என்பது ஏட்டிலும் வெகுசில இடத்தில் மட்டும் உள்ளது. A2B நிகழ்வுகள் தந்தை பெரியாரின் தாக்கம் எவ்வளவு வலியது என்று உணர வைக்கிறது.என்றும் தந்தை பெரியார் வழி நடப் போம், அவர் புகழ் பாடுவோம்.
ஆலடி எழில்வாணன்
தென்காசி மாவட்ட செயலாளர்
பகுத்தறிவாளர் கழகம்
No comments:
Post a Comment