17.10.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்
👉 காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி கூட்டணியோடு தேர்தலை சந்திப்போம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி.
👉 தேர்தல் பத்திரங்கள் எதிரான வழக்கின் விசாரணை அக்டோபர் 31 நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை
👉தமிழ்நாட்டில் 131 பழங்குடியினருக்கான பள்ளிகளில் படிக்கும் 6500 பழங்குடியின மாணவர்களுக்கு ஆங்கிலம் பயிற்றுவிக்க திட்டம் துவக்கம்.
👉தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் 33 இடங்களில் நடத்த நீதிமன்றம் அனுமதி.
👉 2,000 ஏக்கர் நிலம் ஒதுக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது குலசேகரப்பட்டினத்தில் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் தயார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் இஸ்ரோ தலைவர் பேட்டி
தி ஹிந்து
👉 ஜாதிவாரி கணக்கெடுப்பு மக்களை பிளவு படுத்துவதற்காக அல்ல, ஆனால் தகுதியுடையோர் தங்கள் உரிமையை பெறுவதை உறுதி செய்வதற்காக என ராஜஸ் தானில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேச்சு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
👉 டில்லி கலால் கொள்கை வழக்கில் சிசோடியாவை காலவரையின்றி சிறையில் அடைக்க முடியாது. அமலாக் கத்துறை, சிபிஅய்யிடம் உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்.
👉 மணிப்பூரை விட இஸ்ரேல் மீது பிரதமர் மோடி அதிக அக்கறை காட்டுவது வெட்கக்கேடானது என ராகுல் காந்தி சாடல்.
👉 16 எதிர்க்கட்சி தலைவர்கள் டில்லியில் பாலஸ்தீன தூதரைச் சந்தித்து ஒற்றுமையை வெளிப்படுத்தினர். அய்.நா தீர்மானத்தின்படி 1967 எல்லையில் சுதந்திர பாலஸ்தீன அரசை நிறுவுவதை பன்னாட்டு சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்றும் தூதுக்குழு வலியுறுத்தியது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
👉 பா.ஜ.க.வுடன் தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்திட அக்கட்சியின் தலைவர் சி.எம்.இப்ராஹிம் கடும் எதிர்ப்பு.
எகனாமிக் டைம்ஸ்
👉 இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை ஹிந்து மகாசபையால் ஏற்பட்டது; ஜின்னாவால் அல்ல என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா பேச்சு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment