தாம்பரம், அக். 31- ‘நீட் விலக்கு, நம் இலக்கு’ என்ற தலைப்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத் துக்கள் பெற தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கங்கள் திமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தாம்பரம் சண்முகம் சாலையில் நீட் விலக்கு கையெ ழுத்து இயக்கம், சட்டமன்ற உறுப் பினர்கள் எஸ்.ஆர்.ராஜா தலை மையில் நேற்று (30.10.2023) மாலை நடைபெற்றது.
இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்து டன் பங்கேற்று ஏழை, எளிய அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் மசோதாவிற்கு குடியர சுத் தலைவர் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்திட்டனர். கையெழுத் திடப்பட்ட அனைத்து கடிதங்க ளும் திமுக தலைமைக்கு அனுப்பப் பட்டு, பின்னர் குடியரசுத் தலைவ ருக்கு அனுப்பி வைக்கப்படும். நிகழ்ச்சி யில் மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் ரமணி ஆதிமூலம், ஜோதி குமார், சிட்லபாக்கம் சுரேஷ், பெரியநாயகம், திமுக நிர்வாகிகள் கருணாகரன், வேல்மணி, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கார்த்திக், ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment