ஒரிசா பாலு மறைவுக்கு கழகத் தோழர்கள் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 9, 2023

ஒரிசா பாலு மறைவுக்கு கழகத் தோழர்கள் மரியாதை

சென்னை, அக். 9- ஒரிசா பாலு என்கிற சிவ பாலசுப்பிரமணி என்கிற ஒரிசா பாலு, கடல்சார் ஆய்வாளர், ஆமை வழி பாதையை மக்கள் பாதை யாக பயன் படுத்தியதை குறித்து ஆய்வு செய்தவர், குமரி கண்ட ஆய்வாளர், தொல்பொருள் ஆய்வாளர், தமிழ்மொழி ஆய்வாளர், அறிவியலா ளர் மற்றும் இளைஞர்க ளின் நம்பிக்கை நட்சத்தி ரம். இதய நோய் காரண மாக குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 6.10.2023 அன்று மறைவுற்றார். 

திராவிடர் கழகம் சார் பில் தாம்பரம் மாவட் டத் தலைவர் ப.முத்தை யன் தலைமையில் மாவட்ட செயலாளர் கோ.நாத்தி கன், மாவட்ட தொழிலா ளரணி தலைவர் மா.குண சேகரன்,பூவை ஒன்றிய தலைவர் கு.ஆறுமுகம், ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் பூவை க. தமிழ் செல்வன்,தாம்பரம் மாவட்ட இளைஞரணி செயலாளர் கரைமா நகர் தே.சுரேஷ்,பெரியார் நூலக வாச கர் வட்ட பொருளாளர் இராமா புரம் ஜெ.ஜெனார்த்தனம், தாம்பரம் நகர செயலா ளர் சு.மோகன்ராஜ் மற் றும் பல்லாவரம் ச.நரேஷ் ஆகியோர் ஒரிசா பாலு உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். 

7.10.2023 அன்று மாலை 4.30 மணியளவில் இறுதிநிகழ்வு நடை பெற் றது.

No comments:

Post a Comment