ஈரோடு, அக். 11- ஈரோடு மாவட்டம் சிவகிரி, கழகக் காப்பாளர் கு.சண் முகத்தின் வாழ்விணையர் விஜய லட்சுமியம்மாள் 8-.10.-2023 அன்று இயற்கை எய்தினார்.
தகவலறிந்த தோழர்கள் தலை மைக்கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம், மாவட்ட தலைவர் இரா.நற்குணன், மாவட்ட செயலா ளர் மா.மணிமாறன், பேராசிரியர் ப.காளிமுத்து, பொதுக்குழு உறுப் பினர் கோ.பாலகிருட்டிணன், ஒன் றியதலைவர் கே.எம்.கைலாசம், மகளிரணியைச் சார்ந்த ஜெயலட் சுமி, மலர்விழி மணி, நகர தலைவர் வேணுகோபால், சக்திவேல், பார்த் திபன், தங்கராஜ், திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் முத்து முரு கேசன், மணிவேலு, கோபி.வெ. குமாரராஜா, தே.காமராஜ் ஆகி யோர் திராவிடர் கழகத்தின் சார் பாக மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். காங்கிரசை சேர்ந்தவாசுதேவன், சி.பி.அய். வரதராஜன், சி.பி.எம்.சசி, அ.தி.மு.க.குணசேகரன், வி. சி.க.மதி வாணன் உட்பட முக்கிய கட்சிப் பிரமுகர்கள் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் மாவட்ட தலைவர் இரா.நற்குணன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. பேசிய அனைவரும் "கழகக் காப்பா ளர் சிவகிரி சண்முகம் 50 ஆண்டுக ளுக்கு மேலாக பணியாற்றியும் ஊரின் முக்கிய சிக்கல்களுக்கு முன் னின்று போராடியவர் போராடி வருபவர் அவருக்கு உற்ற துணைவ ராக விளங்கி பொதுப்பணிக்கு ஆதரவளித்தவர். இல்லம் தேடி வரும் கழகத் தோழர்களுக்கு உண வளித்தும் இயக்கப் பணிக்கு உற் சாகம் அளித்தவர் இன்று மருத் துவக் கல்லூரிக்கு அவரது உடல் கொடையாக அளித்து பாடமாக விளங்குகிறார் அவர்களுக்கு அனைவரும் வீரவணக்கம் தெரிவித்தனர். பிறகு பெருந்துறை மருத்துவக் கல்லூரி ஊர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டு மருத்துவ மனை அலுவலர்களிடம் அவரது குடும்பத்தினர் மகள்கள், பேரன், பேத்திகள் ஒப்புதலோடு ஒப்படைக் கப்பட்டது. முன்னதாக தமிழர் தலைவர் ஆசிரியர் -. மறைந்த விஜய லட்சுமியம்மாவின் வாழ்விணைய ரும். கழகக் காப்பாளருமான சிவ கிரி சண்முகத்திடம் தொலைபேசி யில் தொடர்பு கொண்டு இரங் கலும், ஆறுதலும் கூறினார்.
No comments:
Post a Comment