கண்களைக் கெடுக்கும் கதிர்வீச்சு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 16, 2023

கண்களைக் கெடுக்கும் கதிர்வீச்சு!

இன்றைய சூழலில் கண் நலனை பாதிக்கும் இரண்டு முக்கிய விஷயங்களாக வெப்பமும், மின்னணுப் பொருட்களும் உள்ளன. அதிக வெப்பம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதால் சூரியனின் புற ஊதாக் கதிர்வீச்சு அளவுகளின் குறியீடும் அதிக மாகவே உள்ளது. குறைந்த கால அளவிற்கு கூட தொடர்ந்து புற ஊதா கதிர்வீச்சுக்கு ஆட் படுவது கண்புரை, இமை முனைத்திசு வளர்ச்சி மற்றும் விழிப்புள்ளி சிதைவு ஆகியவற்றுக்கு நீண்டகால அளவிற்கு பாதிக்கக்கூடிய கண் பிரச்சினையை விளைவிக்கக் கூடும்.

புற ஊதாக் கதிர்கள் எப்படி கண்களை பாதிக்கின்றன?

புற ஊதாக் கதிர்களுக்கு வெளிப்படுவதனால் ஏற்படுகிற கண்நோய் மற்றும் பாதிப்பு நிலைகள் கீழ்க்கண்டவற்றை உள்ளடங்கும். கண் புரைநோய் (கேட்டராக்ட்) என்பது கண் ணின் லென்ஸின் ஒளிபுகா இயல்பாகும். இது வழக்கமாக வயது முதிர்ச்சியின் காரணமாக ஏற்படுகிறது. இதில் இயற்கையான கண் லென்ஸ்கள் மங்கலாக / மந்தாரமாக இருப்பதே இதன் தன்மையாகும்.

புற ஊதா வெளிச்சத்திற்கு குறிப்பாக ஹிக்ஷி-ஙி கதிர்களுக்கு வெளிப்படுவது வயது முதிர்வடை வதற்கு முன்பே இளவயதிலேயே கண் புரை நோய்களை ஏற்படுத்தும் ஆபத்தை அதி கரிக்கும். இமை முனைத்திசு வளர்ச்சி 

(றிtமீக்ஷீஹ்ரீவீuனீ) என்பது புற்றுநோய் அல்லாத இளஞ்சிவப்பு நிறத்தில் சதை வளர்ச்சியை உருவாக்கும் நிலையாகும். கண்விழிப்பட லத்தில் தோன்றும். இது கருவிழி முழுவதிலும் மெதுவாக வளர்ச்சியடைகிறது.

புற ஊதாக் கதிர்வீச்சுக்கு வெளிப்படுவது இவ்வளர்ச்சியை அதிகரித்து உருச்சிதைந்த பார்வைத்திறனுக்கு வழிவகுக்கும்.  விழிப்புள்ளி சிதைவு என்பது காலப்போக்கில் விழித் திரையை சேதப்படுத்துகிற ஒரு பாதிப்பு நிலையாகும். கூர்மையான மய்யப் பார்வைக்கு அவசியமாக இருக்கிற விழித்திரையின் மய்யப் பகுதியான விழிப்புள்ளியை பாதிக்கும் இது முதிர்ந்த வயதில் நிகழ்கிறது.

குறைந்த அல்லது நீண்டநேர காலஅள விற்கு புற ஊதாக் கதிர்வீச்சுக்கு நீடித்த அளவு வெளிப்படுவது ஒரு அல்லது இரு கண்களிலும் பார்வைத் திறன் இழப் பிற்கு வழிவகுக்கக்கூடிய நிலையை உருவாக் கும் இடரை அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக் கின்றனர். கண்கள் சிவத்தல், நீர் வடிதல், மங்கலான பார்வை ஆகியவற்றை விளை விக்கும் ஒரு வலி நிறைந்த இப்பாதிப்பு நிலை யானது கருவிழியின் மென்மையான மேற் பரப்பை பாதிக்கிறது. தற்காலிக பிரச்சினையான இது சிகிச்சையளிக்கப்படும்போது  2-3 நாட் களுக்குள் படிப்படியாக குறைந்துவிடும்.

சூரியக் கதிர்களிலிருந்து கண்களை பாதுகாப்பது

வெளியிடங்களில் இருக்கும்போது புற ஊதாக் கதிர்களை தடுக்கின்ற குளிர் கண்ணாடி களை அணிய வேண்டும். புற ஊதாக் கதிர் களிலிருந்து பாதுகாக்கும் திறனற்ற கருப்புநிற கண் கண்ணாடிகளை அணிவது கண்களுக்கு தீங்கு விளைவிக்கும். புறஊதாக் கதிர்கள் அதிகளவில் கண்களுக்குள் நுழையவும், அதிக சேதத்தை விளைவிக்கவும் அனுமதிக்கும்.

கண்களைப் பாதுகாப்பதற்கான ஆலோசனைக் குறிப்புகள்

* அதிக பிரகாசமான வெளிச்சத்தில் அல்லது மிக மங்கலான வெளிச்சத்தில் கம்ப்யூட்டர்கள், அலைபேசிகளைப் பயன்படுத்துவதையும் மற்றும் தொலைக்காட்சி பார்ப் பதையும் தவிர்க்க வேண்டும். இந்த இரு செயல்பாடுகளுமே கண்கள் மீது மிகைப்பட்ட அழுத்தத்தை ஏற்படுத்தும். உகந்த வெளிச்சம் உள்ள இடத்தில் மட்டுமே இவைகளைப் பயன்படுத்த வேண்டும்.

* விளக்குகள் அணைக்கப்பட்டிருக்கும் போது குழந்தைகள் மற்றும் இளவயது நபர்கள், அலைபேசி பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ஊக்குவிக்கப்பட வேண்டும். ஏனெனில், இது அவர்களது பார்வைத்திறனை பாதிக்கக்கூடும்.

* தங்களது திறன் பேசிகளில் அதிக நேரம் செலவிடுகிற குழந்தைகள் மற்றும் இளவயது நபர்களுக்கு உலர்ந்த கண்கள் பிரச்சினையின் அதிக அறிகுறிகள் இருப்பதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஆகவே அலைபேசிகள், வீடியோ கேம்கள் மற்றும் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துவதில் மிக அதிகமான நேரத்தை செலவிடாமல் இருக்கு மாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

* கம்ப்யூட்டர் மற்றும் அலைபேசியின் டிஸ்பிளே வெளிச்ச நிலையானது சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். இருட்டான அறையில் அளவுக்கு அதிகமான வெளிச்சத்தில் டிஸ்பிளே இருப்பது கண் அழுத்தத்தை உருவாக்கும்.

* அடிக்கடி சிமிட்டுவது (மூடி திறப்பது) கண்களில் ஈரப்பதம் இருக்குமாறு செய்யும்; கண்கள் உலர்ந்து விடாமல் இது தடுக்கும்.

* 20-20-20 விதி என்ற கண் உடற்பயிற்சியை பின்பற்றவும். இது மிகவும் எளிதானது. 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, 20 வினாடிகள் காலஅளவிற்கு 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை கூர்ந்து கவனிக்கவும். இது கண் தசைகளை தளர்வாக்கும் மற்றும் அவை களுக்கு ஓய்வினை வழங்கும்.

எந்த நேரத்தில் சூரிய கதிர்கள் ஆபத்தானவை?

புற ஊதாக் கதிர்வீச்சின் உயர் ஆபத்து வகையின் கால அளவு என்பது பகலில் காலை 9 மணியிலிருந்து 11 மணி வரை என்றுபொதுவாக வரையறுக்கப்பட்டுள்ளது. மிக உயர்வான ஆபத்து கால அளவு என்பது காலை 11 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரை மற்றும் பிற்பகல் 3 மணியிலிருந்து 4 மணி வரை என அறியப்பட்டுள்ளது.

எனினும் இந்த ஆபத்தானது நண்பகல் 12 மணியிலிருந்து, பிற்பகல் 3 மணி வரை அளவுக்கு அதிகமான தீவிர ஆபத்து விளை விக்கும் நேரம் என அறியப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் கண்புரை பாதிப்புள்ள சுமார் 12 முதல் 15 மில்லியன் நபர்கள் பார்வைத்திறனை இழக்கின்றனர்.

சூரியக் கதிர்களுக்கு வெளிப்படுவதனால் 20 விழுக்காடு வரை பார்வைத்திறனிழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment