ஆட்சியரின் அருமைப் பணி ஊர்த்தெருக்களில் ஜாதிப்பெயர் அகற்றம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 8, 2023

ஆட்சியரின் அருமைப் பணி ஊர்த்தெருக்களில் ஜாதிப்பெயர் அகற்றம்!

தூத்துக்குடி, அக்.8 -   ஜாதி பெயரில் தெருக்கள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் விரைவில் உருவாகவுள் ளது. இதன் முதல் நடவடிக்கையாக மாவட் டத்தில் 33 ஊராட்சிகளில் உள்ள ஜாதி பெயரில் உள்ள 80 தெருக்களின் பெயர்களை மாற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி யில் கடந்த ஆகஸ்ட் மாதம் 9ஆ-ம் தேதி பள்ளி மாணவரும், அவரது சகோதரியும் ஜாதி ரீதி யான மோதல் காரண மாக வெட்டப்பட்டனர். இதையடுத்து ஜாதிய மோதல்களை தடுக்கவும், சமூக ஒற்றுமையை வளர்க்கவும் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. 

ஜாதிய அடையாளங்கள்

இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத் தில் பொது இடங்களில் உள்ள ஜாதி ரீதியான அடையாளங்களை பொதுமக்களின் உதவி யோடு அகற்றும் நட வடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் களம் இறங்கி யது.

இதன் முதல் நட வடிக்கையாக கடந்த ஆகஸ்ட் 15ஆ-ம் தேதி சுதந்திரதின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் மேல ஆத் தூர் ஊராட்சியில் நடை பெற்ற கிராம சபை கூட் டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், இந்த ஊராட்சிக்கு உள் பட்ட பகுதிகளில் ஜாதி பெயரில் உள்ள தெருக்க ளின் பெயர்களை மாற்ற பரிந்துரை செய்தார். 

இதனை மேல ஆத் தூர் கிராம மக்கள் ஏற் றுக் கொண்டனர். இதை யடுத்து மேல ஆத்தூர் ஊராட்சியில் ஜாதி பெய ரில் இருந்த 9 தெருக்களின் பெயர்களை மாற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டு, அது உடனடியாக அமல்படுத்தப்பட்டது. இந்த 9 தெருக்களுக்கும் சுதந்திர போராட்ட தியாகிகள் பெயர் சூட் டப்பட்டது.

ஆட்சியர் நடவடிக்கை

இதன் தொடர் நடவ டிக்கையாக மாவட்டத் தில் அனைத்து ஊராட்சி களிலும் ஜாதி பெயரில் உள்ள தெருக்களின் பெயர்களை மாற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சித் தலைவர் களுக்கு ஆட்சியர் செந் தில் ராஜ் வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதி னார்.

ஆட்சியரின் இந்த வேண்டுகோளை தற் போது மேலும் 33 ஊராட்சிகள் ஏற்றுக் கொண்டுள்ளன.

காந்தி பிறந்த நாளை முன்னிட்டு 2.10.2023 அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 33 ஊராட்சிகளில் ஜாதி பெயர்களில் உள்ள 80 தெருக்களின் பெயர் களை மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள் ளது. 

பெயர் மாற்றம்

இதுகுறித்து ஆட்சி யர் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட் டத்தில் பல கிராமங்களில் தெருக்களின் பெயர்கள் ஜாதிய அடையாளங்க ளுடன் இருந்தன. 

அவற்றை நீக்கி சுதந் திரப் போராட்ட வீரர் கள், தமிழ்ப்புலவர்கள், கவிஞர்கள், தமிழ் இலக் கிய ஆளுமைகள், விஞ்ஞானிகள், மிகச்சிறந்த அறிவியல் கண்டுபிடிப் பாளர்களின் பெயர் களை அமைக்குமாறு கிராம ஊராட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத் தோம்.

இதனை ஏற்று மேல ஆத்தூர் கிராம ஊராட்சி யில் ஜாதி பெயரில் அமைந்த 9 தெருக்களின் பெயர்கள் மாற்றப்பட் டன. இதன் தொடர்ச்சி யாக 33 கிராம ஊராட்சி களில் 80 தெருக்களின் ஜாதி பெயர்களை நீக்கி பொதுவான பெயர்களை வைக்க தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

அரசிதழில் வெளியீடு:

மாவட்ட நிர்வாகத் தின் வேண்டுகோளை ஏற்று தெருக்களின் ஜாதி பெயர்களை நீக்கிய ஊராட்சி மன்ற தலைவர் கள், உறுப்பினர்கள், அலுவ லர்கள் மற்றும் பொது மக்களுக்கு நன்றி.

தெருக்களின் பெயர் மாற்றம் விரைவில் அரசி தழில் வெளியிடப்பட்டு, புதிய பெயர்களை நிரந் தரமாக அனைத்து ஆவணங்களி லும் இடம் பெறச்செய்ய நடவடிக்கை எடுக்கப் படும்.

இதேபோல் மற்ற ஊராட்சிகள், பேரூ ராட்சி, நகராட்சி, மாநக ராட்சி பகுதிகளிலும் ஜாதி பெயரிலான தெருக் களின் பெயர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment