கேள்வி 1: இந்தியா பட்டினிப் பட்டியலில் 111ஆவது இடத்தில் உள்ளதே என்ற கேள்விக்கு நாட்டிற்காக பசியைப் பொறுத்துக்கொள்ள முடியாதா என்று ஸ்மிருதி இரானி கேட்டுள்ளாரே?
- ப.ஆறுமுகம், உத்திரமேரூர்
பதில் 1: அந்த அமைச்சர் தொடர்ந்து இப்படியே 2024 பொதுத்தேர்தல் வரை பேச வேண்டும் என்பதே நமது அன்பான வேண்டுகோள். ஏழை மக்களுக்கு - பசித்தவர்களுக்கு - பட்டை நாமம்!!!
---
கேள்வி 2: உத்தரப்பிரதேசத்தில் டிஜிட்டல் மருத்துவமனை என்ற பெயரில் நோயாளிகளைத் தொடாமல் அவர்களின் பிரச்சினைகளை கேட்டு மருந்து கொடுக்கும் முறையை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தி உள்ளதே - இது தொழில்நுட்பமா அல்லது நவீன தீண்டாமையா?
- வே.காந்திமதி, திருத்தணி
பதில் 2: நவீன தீண்டாமை தான் - ஒரு சூதான சூழ்ச்சி!
---
கேள்வி 3: கேரளாவைச் சேர்ந்த ஒரு ஆடை தயாரிப்பு நிறுவனம் இஸ்ரேல் ராணுவத்திற்கான ஆடை தயாரித்து தரமாட்டோம் என்று கூறியுள்ளது. இதனால் அந்த நிறுவனத்திற்கு ரூ.19 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது, இந்தக் காலத்திலும் இப்படி ஒரு நிறுவனமா?
- மா.கோவிந்தசாமி, வேலூர்
பதில் 3: உணர்வுதான் இதில் முக்கியம் - பணமல்ல.
---
கேள்வி 4: "தலையைச் சீவிடுவேன்" என்று சொல்லிக்கொடுத்த இயக்கமல்ல, "தலைநிமிர்ந்து வாழவைக்க வைத்த இயக்கம்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே?
- க.உயிர்மொழி, மதுரை
பதில் 4: சரியான பதிலடி - முதல் அமைச்சரின் முத்தாய்ப்பான தலைக்குட்டு!
---
கேள்வி 5: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் என்ற ஒரு கட்சியே இல்லாமல் ஆக்கிவிடும் வேலையில் பா.ஜ.க. இறங்கியுள்ளதே?
- தா.அருள், திருச்சி
பதில் 5: பா.ஜ.க. அதை 4 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி, இப்போது பூர்த்தி செய்யவே தயாராகிறது!
---
கேள்வி 6: பெண்கள் மீது கை வைப்பவர்களை தூக்கில் போடும் சட்டம் கொண்டுவருவேன் என்று ம.பி. முதலமைச்சர் சிவராஜ் சிங் சவான் கூறியுள்ளாரே?
- வா.பகத்சிங், திண்டிவனம்
பதில் 6: தேர்தலில் முதலில் அவர் வெற்றி பெறுவாரா என்ற நிலையில் இப்படி ஒரு வீராப்பு - வெட்டிப் பேச்சா?
---கேள்வி 7: இஸ்ரேலுக்கும் ஆதரவு தெரிவித்துவிட்டு - பாலஸ்தீனத்திற்கும் உதவிப் பொருட்களை அனுப்புகிறாரே மோடி?
- கா.பாரி, கோவை
பதில் 7: அதுதான் ஆர்.எஸ்.எஸ்.; அவர்தான் மோடி . இரட்டைவேடம், ஆரியத்தின் இயல்புதான் அது!
---
கேள்வி 8: செயலாளர் மட்டத்தில் உள்ள அதிகாரிகளையும், இராணுவத்தினரையும் அரசின் திட்டங்கள் குறித்த பரப்புரையில் ஒன்றிய அரசு கட்டாயமாக ஈடுபட ஆணையிடுகிறதே - அவர்கள் என்ன பா.ஜ.க. தொண்டர்களா?
- சு.பல்லவன், வியாசர்பாடி
பதில் 8: அரசமைப்புச் சட்டப்படியும், நியாயப்படியும் இது அரசு அதிகார துஷ்பிரயோகம்.---
கேள்வி 9: இஸ்ரேல் விவகாரத்தில் சீனாவும் - அமெரிக்காவும் அப்பத்தைப் பங்குபோடும் குரங்குகளாக மாறிவிட்டனவா?
- சே.காளிமுத்து, பெரம்பலூர்
பதில் 9: "அமைதி வேண்டுமானால் போரைத் துவங்குங்கள்" என்ற ஓர் ஆங்கிலப் பழமொழி உண்டு. "If you want peace, prepare for a war."---
கேள்வி 10: "பா.ஜ.க.வில் இருந்து விலகிய நடிகை என்னிடம் வந்திருந்தால் நான் அவரின் பிரச்சினையை தீர்த்திருப்பேன்" என்று தமிழிசை கூறியிருக்கிறார் - அவர் ஆளுநரா அல்லது கட்டப் பஞ்சாயத்துத் தலைவரா என்று மக்கள் கேட்கின்றார்களே?
- மா.சோலைகான், வாலாஜாபாத்
பதில் 10: பழைய நடிகைக்குப் போட்டியாக இப்படி ஒரு நிலைப்பாடா? வேதனை! வேதனை!!
No comments:
Post a Comment