ஈரோடு, அக்.18 புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் அண்மையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பொதுக் கூட்டத்தில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் செந்தில்குமார், திருப்பூர் நகரச் செயலாளர் கேசவன், ஈரோடு மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ் ஆகியோர் புஞ்சைபுளியம்பட்டி நகர திமுக செயலாளரும், நகர்மன்ற துணைத் தலைவருமான சிதம்பரத்தை அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் சிதம்பரம் புகார் அளித்தார்.
இதையடுத்து, இந்து முன்னணி நிர்வாகிகள் 3 போர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல்துறை, செல்வராஜை கடந்த மாதம் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்து முன்னணி மாநிலச் செயலாளர் செந்தில்குமாரை கைது செய்த காவலர்கள், அவரை சத்தியமங்கலம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
இதில், செந்தில்குமாரை கோவை மத்திய சிறையில் அக்டோபர் 30-ஆம் தேதி வரை அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், தலைமறைவாகவுள்ள கேசவனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment