பொதுச் செயலாளர் ஆனி ராஜா சூளுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 5, 2023

பொதுச் செயலாளர் ஆனி ராஜா சூளுரை

 மாதர் தேசிய சம்மேளன மாநில மாநாடு  ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யை வீழ்த்துவோம்

திருச்சி, அக்.5 ஆர்எஸ்எஸ், பாஜகவை வீழ்த்தும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று மாதர் தேசிய சம்மேளன அகில இந்தியப் பொதுச் செயலாளர் ஆனி ராஜா கூறினார். 

இந்திய மாதர் தேசிய சம்மேள னத்தின் 15-ஆவது மாநில மாநாடு திருச்சியில்  3.10.2023 அன்று தொடங் கியது. மாநாட்டைத் தொடங்கிவைத்து சம்மேளனத்தின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் ஆனி ராஜா பேசியதாவது: 

இந்தியாவில் பாஜக ஆட்சிக்குவந்த பின்னர், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் சம்ப வங்கள் அதிகரித்துள்ளன. தாழ்த்தப் பட்டோர், சிறுபான்மையினர், பழங்குடியினர் மீதான வெறுப்புணர்வு வளர்க்கப்பட்டுள்ளது. பஜ்ரங் தள், ஆர்எஸ்எஸ், பாஜக போன்றவை நாட்டில் வெறுப்புணர்வை வளர்த்து வருகின்றன. இந்தியாவில் பெண்களைப் பாதுகாக்க நிறைய சட்டங்கள் இருந் தாலும், அவை செயல்படாமல் உள்ளன. 

பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப் பட்டாலும், அது இப்போதைக்கு அமல்படுத்தப்படாது. மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, தொகுதி மறு வரையறை செய்த பிறகுதான் அமல் படுத்தப்படும் என்பது மிகப்பெரிய ஏமாற்று வேலை.எனவே,பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றை வீழ்த்தும் வரை மாதர் சம்மேளனம் போராடும். 

இவ்வாறு அவர் பேசினார்.

மாநிலத் தலைவர் பி.பத்மாவதி தலைமை வகித்தார். அமைப்பின்மாநில மேனாள் செயலாளர் வசந்தா ரத்தின வேலு மாநாட்டுக் கொடியேற்றினார். மாநில துணைச் செயலாளர் டி.பி.லலிதா, தியாகிகள் நினைவுச் சுடரைப் பெற்றுக் கொண்டார். இன்று (அக். 4) மாலை பொதுக்கூட்டத்துடன் மாநாடு நிறைவடைகிறது.


No comments:

Post a Comment