வல்லம், அக். 1- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் சமூகப் பணித்துறையின் குழந்தை கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக் குழு, ஆத்மா மருத்துவமனை திருச்சி, தமிழ்ப்பல்கலைக் கழகம் தஞ்சாவூர் மற்றும் மைண்ட் கிளப் இணைந்து குழந்தைகள் உளவியல் மற்றும் நலவாழ்வு குறித்த கருத்தரங்கம் நடத்தப் பட்டது. இந்நிகழ்வில் சமூகப் பணித் துறை முதலாம் ஆண்டு மாணவி ஜீவிதா வரவேற்புரை ஆற்றி னார்.
அதனைத் தொடர்ந்து முனைவர் ஞானராஜ் (உதவிப் பேராசிரியர், சமூ கப் பணித்துறை) அறிமுக வுரை ஆற்றினார். அவர் தமது உரையில் சமூகப் பணித்துறை செயல்பாடு கள் குறித்தும் விளக்கினார்.
மேலும் குழந்தைக ளின் உடலையும், மனதை யும் பாதுகாப்பதன் மூலம் நல்ல சமூகத்தை உருவாக்கலாம் எனக் கூறினார். இவ்விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழகத் தின் கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறை யின் துறைத் தலைவர் கு.சின்னப்பன் தலைமையேற்று, தமது உரையில், குழந்தைகளின் நலவாழ்வு உறுதிப்படுத்து வதன் மூலம் எதிர்கால சமூகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியும் என்றார்.
திருச்சி ஆத்மா மன நல மருத்துவமனையின் மருத்துவரும், உளவியல் நிபுணருமான மருத்துவர் எம்.அஜய் முத்துகுமார் சிறப்புரையாற்றினார். அவர் கூறியதாவது:
குழந்தைகளின் மன நலத்தை எவ்வாறு அறிந்து கொள்வது என்பதனை பற்றி தெளிவாக கூறி னார். "இன்றைய காலங்க ளில் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவ தற்கு கைபேசி மற்றும் சமூக வலைதளங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது எனக் கூறினார். மேலும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தை கள் மனநலத்தை உற்று நோக்கி அவர்களுடன் செயல்பட வேண்டும்" என்றார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 150 கல்வியியல் மற்றும் மேலாண்மை துறை மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர்.
இறுதியாக பி.கார்த் திக் முதலாம் ஆண்டு சமூகப் பணித்துறை மாணவர் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியினை பெரியார் மணியம்மை நிகர்நிலை பல் கலைக்கழகத்தின் சமூகப் பணித்துறை குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராம ரிப்பு குழு ஜீவிதா, ஆகாஷ், கிருத்திகா, கார்த்திக் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
No comments:
Post a Comment