பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய ஆரிய மாயை நூலில்.. "பேராசைப் பெருந்தகையே போற்றி! பேச நா இரண்டுடையாய் போற்றி! தந்திர மூர்த்தி போற்றி! தாசர்தம் தலைவா போற்றி! வஞ்சக வேந்தே போற்றி! வன்கண நாதா போற்றி! கொடுமைக் குணாளா போற்றி! கோழையே போற்றி, போற்றி! பயங்கொள்ளிப் பரமா போற்றி! படுமோசம் புரிவாய் போற்றி! சிண்டுமுடிந் திடுவோய் போற்றி! சிரித்திடு நரியே போற்றி! ஒட்டுவித்தை கற்றோய் போற்றி! உயர் அநீதி உணர்வோய் போற்றி! எம் இனம் கெடுத்தோய் போற்றி! ஈடில்லாக் கேடே போற்றி! இரைஇதோ, போற்றி! போற்றி! ஏத்தினேன் போற்றி! போற்றி! இந்தப் போற்றித் திருப்பா, புதுமையானதாக இருக்கிறதே! இதன் பொருள் விளங்கவில்லையே. பேராசையும் வஞ்சகமும், பிறவுமான கேடுபயக்கும் குண முடையோரைப் போற்றுவது, மடைமையன்றோ? ஒழித் திடவேண்டியதைத் தொழுதிடுவது அறிவுடைமையாகுமா? தேளைத் தேவனென்றும், பாம்பைப் பரமனென்றும், நரியை நாதனே என்றும், புலியைப் புண்ணியா வென்றும், பித்தருங் கூறாரே ! நீயோ, நய வஞ்சகரை-நா இரண்டுடையாரை, நாவார வாழ்த்துகிறாயே போற்றி போற்றி.
1807இல் வெளிவந்த "Hindu Manners Customs and Ceremonies" Abbe J.A. Dubois எழுதிய புத்தகத்தில் அவர் பார்ப்பனர்களை இவ்வண்ணம் அர்ச்சித்துள்ளார். ஆங்கிலத்தில்"Avarice, Ambition, Cunning, Wily, Double tounged, Servile, Insinuating, In-justice, Fraud, Dishonest, Oppression, Intrigue. இந்த சொற்களுக்கான அர்த்தங்களை அகராதியில் தேடிப் படியுங்கள். பிறகு மேலே சொன்ன போற்றி போற்றி பாசுரம் சரியா தவறா என்று யோசியுங்கள் என்கிறார் பேரறிஞர் அண்ணா.
தற்போதைய அரசியல் ஆளுநர் ஆர்.என்.ரவி விழாவில் பிரித்தாளும் கொள்கைகளுக்காகவே கால்டுவெல் போன்றவர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர் என்று பேசினார். இந்த ஆரியர்களுக்கு தங்கள் சமஸ்கிருத மாயையை உருவாக்க இந்த ராபர்ட் கால்டுவெல் தடையாக இருக்கிறார். இவர்களின் ஒரே ஃபார்முலா இவர்களின் தடைகளாக இருப்பவர்களை சுய பரிசோதனை செய்ய இறங்குவது.. அதன் மீட்சியே ராபர்ட் கால்டுவெல் பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டவர் என்பன போன்றவை.. அதை அவரேதான் தெரிவித்திருக்கிறாரே. அவர் வெளியிட்ட ஆராய்ச்சியை இவர்களால் ஜீரணிக்க முடியாத கோழைகள்.
ஆளுநருக்கு பதில்
ஆரியம் திராவிடம் இல்லையென்று நுனிநாக்கில் கூறிவிட்டு எவ்வளவு விழிப்போடு உங்கள் அடையாளத்தோடு இருப்பீர்கள் நாங்கள் அறிவோம்...
எத்தனை யுகங்களாக ஏமாற்றிப் பிழைக்கிறார்கள்
இன்றும் நடுநிலைக்கொள்கையை இந்தியா கைக்கொள்கிறது துவக்கத்தில் அவசரப்பட்டு இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுத்துவிட்டு பிறகு பதறிப்போய் பாலஸ்தீனத்திற்கு உதவிக்கரம் நீட்டுகிறது மோடி அரசு - காரணம் இங்கு அசோகன் என்னும் மாமன்னனின் கொள்கை இன்றும் உள்ளது.
அலெக்சாண்டர் இன்றைய கந்தகார் வந்து சிந்துநதியின் அக்கரைவரை நின்று போரிட்டான் - இருப்பினும் அவன் புத்தனின் பூமிக்குள் போரிடமுன்வராமல் திரும்பிவிட்டான்.
புத்தனும் அசோகர் என்றொரு பேரரசனும் வாழ்ந்தனர் என்பதையே ஜேம்ஸ் பிரின்செப் (James Prinsep) என்ற ஆங்கிலேயர் அகழாய்வு செய்து சொல்லும் வரை பார்ப்பனக் கூட்டம் அதை ஒழித்தே வைத்திருந்தது
1860களில் நில அளவையராக வந்த ஆர்வலரான ஜான் மார்ஷல் (John Marshall) ஆடு மேய்த்துக்கொண்டு இருந்த சிந்துவெளி நாகரிகம் பற்றி அறிவிக்கும் வரை.
நீங்கள் சொன்ன பொய்களே இந்நாட்டின் வரலாறு!
கால்டுவெல் (Caldwell) வந்து பிராகுயி மொழி உள்ளிட்ட திராவிட மொழிக் குடும்பம் பற்றி பேசும் வரை
நம்மைப் பற்றிய நமது புரிதல் வேறு!
தேவ மொழி என்ற கதையை நாங்கள் ஒப்புக்கொள்ள மறுத்ததும்
உடுக்கையின் மறுபுறம் பிறந்தமொழி என்று கதை சொன்னீர்கள்!
சிந்துவெளி, சங்க இலக்கியம், கீழடி ஆதிச்சநல்லூர் தரவுடன் நாங்கள் வருகிறோம்!
"எங்கே அமர்ந்து பேசலாம் என்று நீங்கள் சொல்லுங்கள்!
சங்க இலக்கியம் பேசிய பகடையை சிந்துவெளியிலும் கீழடியிலும் நாங்கள் காட்டுகிறோம்!
மகாபாரதப் பகடையை நீங்கள் காட்டுங்கள்!
வரலாறு என்பது வந்த வழி
No comments:
Post a Comment