சென்னை, அக்.25 - உலகின் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை இடம் பெற்றுள்ளதாக, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் குற்றச்சம் பவங் களை தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்தா லும், பல்வேறு நகரங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களும், பெண் கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும் நாள் தோறும் நடந்துகொண்டே தான் இருக்கின்றன.
இந்தியாவின் மற்ற பெரு நகரங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை எப்போதும் மிகவும் பாதுகாப்பான நகரம்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை! இந்தியாவில் பெண் கள் வேலை பார்க்க, மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட் டியலை, கடந்த ஜனவரி மாதத் தில் தனியார் ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டது.
பாதுகாப்பு சூழல், போக்கு வரத்து வசதி பணி வாய்ப்புகள், சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வின் பட்டியலில் முதலிடம் பிடித்த நகரம் சென்னை, அத் துடன், முதல் 11 இடங்களில் கோவை, மதுரை ஆகிய நகரங் களும் இடம்பிடித்து இருந்தது. இந்நிலையில், தற்போது உலகி லேயே மிகவும் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது சென்னை.
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் பணியாற்றியுள்ள வடமாநிலத் தொழிலாளர் களும், அண்டை மாநிலத்தைச் சேர்ந்த பலரும் சென்னையில் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவருமே, இந்தியாவின் மற்ற நகரங்களை விட, சென்னையில்தான் மிகவும் பாதுகாப்பாக உணர்வதாக கூறுவதுண்டு, அதை தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை உறுதி செய் துள்ள நிலையில், தற்போது உல களாவிய சேப்டி 'இன்டெக்ஸ்' என்ற கணக்கிடும் உறுதிப்படுத்தி யுள்ளது.
உலகில் மிகவும் பாதுகாப் பான நகரங்கள் குறித்த 2023ஆம் ஆண்டுக்கான அறிக்கையை செர்பியாவை சேர்ந்த ழிஹிவிஙிணிளி என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் 334 நகரங்களை உள்ளடக்கிய இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருப்பது, சட்டத்திட்டங்களை கடுமை யாக வைத்திருக்கும் அய்க்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த அபுதாபி மற்றும் அஜ்மாள் ஆகிய நகரங்கள் தான்.
மூன்றாவது இடத்தை கத் தாரின் தோஹா பிடித்துள்ள நிலையில், முதல் 10 இடங்களில் எந்த இந்திய நகரங்களும் இடம் பெறவில்லை.
ஆனாலும், 40ஆவது இடத்தை கருநாடக மாநிலத்தை சேர்ந்த மங்களுருவும், 76ஆவது இடத்தை குஜராத் மாநிலம் வதோதராவும், 82ஆவது இடத்தை அதே மாநிலத்தைச் சேர்ந்த அகமதா பாத்துமே பிடித்துள்ளன.
இந்தப் பட்டியலில், சூரத் 94ஆவது இடத்தையும், நவி மும்பை 105ஆவது இடத்தையும் பிடித்திருந்தாலும், இவை எது வுமே பெருநகரங்கள் இல்லை.
அதே நேரத்தில், பாதுகாப்பு அளவீட்டில் 60 சதவீதத்தையும், குற்ற அள வீட்டில் 40 சதவீதத் தையும் கொண்டுள்ள சென்னை, 127ஆவது இடத்தை பிடித் துள்ளது. அதன் அடிப்படையில், மிகவும் பாதுகாப்பான இந்தி யாவின் பெருநகரம் அதாவது மெட்ரோ நகரம் என்று பார்த் தால், அது சென்னைதான். இதற்கு அடுத்த இடத்தில்தான், இந்தியாவின் பிற மெட்ரோ நகரங்களான மும்பை, கொல் கத்தா, பெங்களூரு, டில்லி உள்ளிட்டவை இடம்பெற் றுள்ளன.
இந்தியாவில் குற்றங்கள் அதிகம் நடைபெறும் நகரங்கள் என்ற பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது நாட்டின் தலை நகரான டில்லி 2ஆவது இடத்தை நொய்டாவும், 3ஆவது இடத்தை குர்கானும் பிடித்துள்ளன. உலக அளவில் குற்றங்கள் அதிகம் நடைபெறும் நகரங்கள் பட்டி யலில் முதலிடத்தில் இருப்பது. வெனிசுலா நாட்டின் கராகஸ் நகரம், முதல் 10 இடங்களை பிரேசிலை சேர்ந்த 4 நகரங்களும், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 3 பகுதிகளுமே பிடித்துள்ளன.
முதல் 100 இடங்களில் 72ஆவது இடத்தை டில்லியும், 93ஆவது இடத்தை நொய்டா வும் பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், எப் போதும் பதற்றமாக இருக்கும் பாகிஸ்தானின் கராச்சி 96ஆவது இடத்தை பிடித்து ள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment