சென்னை, அக்.1 வரைவுப் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பு எப்போது வேண்டுமானாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம். என தமிழ் நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல் ஆகிய பணிகளை மேற்கொள்வ தற்கு அக்.27-ஆம் தேதியில் இருந்து வாய்ப்புகள் அளிக்கப்படவுள்ளன. இதற்காக அன்றைய தினத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
அந்தத் தேதியிலிருந்து வாக் காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கவும், நீக்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் உரிய படிவங்கள் மூலமாக பணிகளை மேற்கொள் ளலாம்.
அதேநேரத்தில், இந்தப் பணி களை ஆண்டு முழுவதும் இணைய தளம் வழியாக மேற்கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் ஆகிய பணிகளை எப்போது வேண்டுமானாலும் செய்ய முடியும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
எதற்கு எந்தப் படிவங்கள்?: வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்புக்கு படிவம் 6, வெளிநாடு வாழ் தமிழராக இருந்தால், அவரது பெயரைச் சேர்க்க படிவம் 6ஏ, பட்டியலில் பெயர்களை நீக்க படிவம் 7-அய் பயன்படுத்த வேண்டும்.
ஒரு தொகுதியிலிருந்து வேறொரு தொகுதிக்கு இடமாறி னாலோ அல்லது இப்போது வசிக்கும் தொகுதிக்குள்ளேயே இடம் மாறினாலோ படிவம் 8-அய் பயன்படுத்தி முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கு வாக்காளர்கள் தாங் களாகவே விருப்பத்தின் அடிப் படையில் ஆதார் எண்ணை அளித்து வருகின்றனர். அந்த வகையில், படிவம் 6பி-இல் ஆதார் எண்ணைக் குறிப்பிட்டு அளிக்க லாம்.
இந்தப் பணிகளை அக்.28-ஆம் தேதியிலிருந்து ஒரு மாதத்துக்கு நடைபெறும் வாக்காளர் பட் டியல் திருத்தப் பணிகளின் போது செய்யலாம். இத்துடன் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் வழியே எப்போது வேண்டுமானா லும் செய்து கொள்ளலாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
No comments:
Post a Comment