நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை நாளை தொடங்குகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 9, 2023

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை நாளை தொடங்குகிறது

நாகப்பட்டினம், அக். 9-  நாகை துறை முகத்தில் இருந்து இலங்கைக்கு நேற்று (8.10.2023) பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

நாகை - இலங்கையின் காங்கேசன் துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று   ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாகை துறைமுகம் அரு கில் கடுவையாற்று முகத்துவாரத்தை தூர் வாரும் பணி நடைபெற்றது. 

மேலும், பயணிகளின் கடவுச் சீட்டு களை ஆய்வு செய்வது, மருத்துவப் பரி சோதனை மேற்கொள்வது, பயணிகள் கொண்டு வரும் உடைமைகளைப் பாதுகாப்பாக வைப்பது மற்றும் ஆய்வு செய்வது போன்றவற்றை மேற்கொள்ள தனித்தனியாக அறைகளை உருவாக்கும் பணிகள் துறைமுகத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

அதேபோல, துறைமுக வளாகத்தில், நாகை பயணியர் முனையமும் அமைக் கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 7.10.2023 அன்று முற்பகல் `செரியாபனி பயணிகள் கப்பல்' நாகை துறைமுகத்துக்கு வந்தது. தொடர்ந்து, நேற்று (8.10.2023) காலை சோதனை ஓட்டம் நடைபெற்றது. நாகையில் இருந்து இலங்கையின் காங் கேசன்துறைக்கு சோதனை ஓட்டமாகச் சென்ற செரியாபனி பயணிகள் கப்ப லில், அதில் பணியாற்றும் 14 துறைமுக அதிகாரிகள் சென்றனர். நாகை லைட் ஹவுஸ்அருகில் கடற் கரையோரம் நின்றபடி, பயணிகள் கப்பல் செல்வதை பொதுமக்கள் ரசித்தனர்.

இன்றும் (அக்.9) சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, நாகை துறைமுகத்தில் இருந்து இலங் கையின் காங்கேசன்துறைக்கு பயணி கள் கப்பல் போக்குவரத்து நாளை (10.10.2023) முதல் தொடங்குகிறது. இதனால், நாகை மாவட்ட வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.

No comments:

Post a Comment