தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழக இணைச் செயலாளர் ஒக்கநாடு மேலையூர் ஆ.லெட்சுமணன், மறைந்த ஆ.முருகன் மற்றும் மகள்கள் பூபதி, பிரேமா, இளவழகி ஆகியோரின் தாயாரும், மறைந்த தாடி ஆறு முகம் அவர்களின் இணையருமான ஆ.தையலம்மாள் நேற்று (9-10-2023) மாலை 4 மணிக்கு மறைவுற்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அம்மையாரின் இறுதி ஊர்வலம் இன்று 10.10.2023 மாலை நடைபெற்றது.தஞ்சை மாவட்டம் மற்றும் ஒக்கநாடு மேலையூர் கழகப்பொறுப்பாளர்கள் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் மறைவுற்ற தையலம்மாள் உடலுக்கு மரியாதை செலுத்தி அவர்தம் குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்தனர்.
தொடர்புக்கு: ஆ.லெட்சுமணன் - 80981 75571
No comments:
Post a Comment