தென்காசி மாவட்டம் பகுத்தறிவா ளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 30.9.2023 அன்று ஆலங்குளத்தில் தென் காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் முனைவர் ஜி.எஸ்.எஸ். நல்ல சிவன் தலைமையில் நடைப்பெற்றது.
மாநில பகுத்தறிவாளர் கழக தலை வர் இரா.தமிழ்ச்செல்வன், பகுத்தறிவா ளர் கழக மாநில துனணத்தலைவர் கே.டி.சி. குருசாமி, பொதுச்செயலாளர் வி.மோகன் மற்றும் தென்காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ஆலடி எழில்வாணன் ஆகியோர் சிறப் புரையாற்றினார்கள்.
தென்காசி மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் த.வீரன், துணைத் தலைவர் ம.செந்தில்வேல், காப்பாளர் சீ.டேவிட்செல்லத்துரை, அய்.இராமசந் திரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.சவுந்திரபாண்டியன், சேக்கிழார், ஆலங்குளம் நகர தலைவர் ஞானராஜ், நகர செயலாளர் பெரியார் குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
No comments:
Post a Comment