இந்நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பேசியதாவது:
திருச்சியில், அக்டோபர் 20 ஆம் தேதி ஆசிரியர் அவர் களுக்குப் பிரச்சார வேன் வழங்கப்பட இருக்கிறது. அந்நிகழ்ச் சிக்கான கலந்துரையாடல் கூட்டத்தை, குறுகிய காலத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்த தோழர்களைப் பாராட்டுகிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சருக்குப் பாராட்டு!
அதேநேரம் அக்டோபர் 6 ஆம் தேதி தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் தஞ்சாவூரில் பாராட்டு விழா நடைபெறுகிறது. மாலை 5 மணிக்குத் தொடங்கி இரவு 8.30 வரை நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. பெரியார் கல்வி நிறுவன மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளை வழங்க இருக்கிறார்கள். முன்னதாகவே வந்து தோழர்கள் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து நிகழ்ச்சியைக் காணு மாறு கேட்டுக் கொள்கிறோம்.
தஞ்சாவூரில் புதிதாகக் கட்டப்பட்ட மாநகராட்சி மாநாட்டு அரங்கத்தில் நமது விழா தான் முதல் நிகழ்ச்சியாகும். இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த அரங்கத்தைத் திறந்து வைத்தார். குளிரூட்டப்பட்ட இந்த அரங்கத்தில் 2 ஆயிரம் பேர் வரை அமரலாம். இதுதவிர வெளியில் 5 ஆயிரம் பேர் அமரும் வகையிலும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
கிரேசி அம்மாவின் நினைவுகள்
தஞ்சாவூரில் மாநாடு போல நிகழ்ச்சி நடைபெறும் அதே வேளையில், அக்டோபர் 20 ஆம் தேதி திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் அவர்களுக்குத் திருச்சியில் "பிரச்சார ஊர்தி" வழங்கும் ஏற்பாடும் நடைபெற்று வருகிறது. அதனை யொட்டி திருச்சி, இலால்குடி, துறையூர் மாவட்டங்களின் முதல் கலந்துரையாடல் கூட்டம் இங்கே நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்ட மகளிரணி காப்பாளராக இருந்த சோ.கிரேசி அவர்கள் ஆகஸ்ட் 20 ஆம் தேதி, தமது 76 ஆம் வயதில் மறைவுற்றார்கள். அவர் மறைவுக்கு ஒருநாள் முன்னதாக அவர்களை வீட்டில் சென்று பார்த்தேன். கடந்த ஒரு வார காலமாகவே பேச்சு, சிரிப்பு என எந்த உணர்வும் இல்லாமல் இருப்பதாகக் கூறினார்கள். ஆனால் நான் சென்று பார்த்த போது, என்னைப் பார்த்துச் சிரித்தார்கள்.
படுத்த படுக்கையாக இருந்த நிலையிலும், உணர்வற்று இருப்பதாகச் சொன்ன சூழலிலும் அவர்களின் அந்தச் சிரிப்பு இன்னும் என் கண் முன்னால் நிற்கிறது. அவர் மறைவிற்குப் பிறகு நான் கலந்து கொள்ளும் முதல் திருச்சி நிகழ்ச்சி இது. அதேபோல கிரேசி அம்மா பங்கேற்காத முதல் கூட்டமும் இதுதான்!
"கிரேசி அம்மா மூலம் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள். அவர்கள் இருந்தால் என்ன செய்வார்களோ, அதேபோல இயக்கப் பணியாற்றி, கிரேசி அம்மா அவர்களுக்குப் புகழ் சேர்ப்போம்", என இங்கே மகளிரணித் தோழர்கள் கூறியது நெகிழ்ச்சியான ஒன்று!
நம் இலக்கு கொள்கை ஒன்றே!
இங்கே தோழர்கள் நன்கொடை வழங்கினார்கள். பணம் சிறியதாகவோ, பெரியதாகவோ இருக்கலாம். ஆனால் ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியமானது. நம்மிடையே பெரியவர், சிறியவர் என்கிற பாகுபாடு இல்லை. நம் இலக்கு என்பது கொள்கை மற்றும் தலைவரே! அவர்களுக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் நிகழ்ச்சியை, பெரு வெற்றியாக நாம் நடத்திட வேண்டும்.
பிரச்சாரம் செய்த வாகனங்கள்!
முதன்முதலில் ஆசிரியர் அவர்களுக்கு "அம்பாசிடர்" கார் வழங்கப்பட்டது. திருச்சியில் 4 துணைவேந்தர்கள் முன்னிலையில் 1992ஆம் ஆண்டு அது வழங்கப்பட்டது. இரண்டாவது பிரச்சார வாகனம் 2000 ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் வழங்கப்பட்டது. மூன்றாவது வாகனம் மூப்பனார் அவர்களின் தலைமையில் 2007 ஆம் ஆண்டில் திருச்சியில் கொடுக்கப்பட்டது. நான்காவது வாகனம் 2012ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சென்னையில் வழங் கினார். அய்ந்தாவது வாகனம் 2017 மதுரையில் கொடுக்கப் பட்டது. எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் போன்றோர் பங்கேற்றனர்.
"இந்தியா" கூட்டணியின் தமிழ்நாட்டுத் தலைவர்கள்!
அதனைத் தொடர்ந்து இப்போது திருச்சியில் 3 ஆவது முறையாக வழங்கப்பட இருக்கிறது. இந்நிகழ்வில் அனைத்துக் கட்சிப் பிரமுகர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ் நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூ னிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ப.அப்துல்சமது உள்ளிட்ட பலரும் பங்கேற்க இருக்கிறார்கள்.
இது ஆசிரியர் அவர்களின் தனிப்பட்ட நிகழ்வல்ல. அனைத்துக் கட்சிகளையும், அதாவது "இந்தியா" கூட்டணி யின் தமிழ்நாட்டுத் தலைவர்களை ஒன்றிணைப்பதன் மூலம் அனைவரும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு, பரஸ்பரம் நட்பு பாராட்டும் சூழல், ஒற்றுமை உணர்வு என அனைத்தும் இதில் அடங்கும். எதிர்வரும் 2024 தேர்தல் என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; இந்தியாவிற்கே முக்கியமானது.
அடுத்தது வெற்றி விழாக் கூட்டம்!
நிகழ்விற்குக் குறுகிய நாட்களே உள்ளன. ரூ 5 இலட்சம் வரை செலவாகும் எனத் திட்டமிட்டுள்ளார்கள். எப்போதுமே ஒரு பெரிய நிகழ்விற்காக நடத்தப்படும் முதல் கூட்டத்தில் கொஞ்சம் அமைதியும், தயக்கமும், சோர்வும் காணப்படும். ஆனால் நிகழ்ச்சி முடிந்து செலவு போக மீதமான நன்கொடை எனக் கொடுப்பதே நமது தோழர்களின் வழக்கமாக இருக் கிறது. அதுதான் நமது தனித்தன்மையும் கூட! திருச்சி மாநகரத்திற்குப் புது தோழர்களும், புதுப் பொறுப்பாளர்களும் நிறைய வந்துள்ளீர்கள். பார்க்கவே பெருமையும், உற்சாகமும் பீறிடுகிறது! ஊர்தி வழங்கிய பிறகு நடைபெறும் வெற்றி விழாவிற்கும் என்னை அழைத்தால் வருவேன்! நிகழ்வைப் பிரமாண்டமாய் வென்று காட்டுவோம்", எனப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பேசினார்.
இக்கலந்துரையாடல் கூட்டத்தில் மு.முத்துச்சாமி, பி.மலர்மன்னன், பா.சுல்தான் பாஷா, மா.இராமதாஸ், ச. துரைசாமி, வெ.ரூபியா, பா.இசபெல்லா, சு.சாந்தி, சே.வசந்தி,மா.செந்தமிழினியன், மு.அறிவழகன், மணிவாசகம், கா.முபாரக், பாலமுருகன், கருப்பு கோகுல், ஆ.அறிவுச்சுடர், ப.கபிலன், சு மகாமணி, மா.இரத்தினம், மா.தமிழ்மணி, அ.ஜெயராஜ், மா.நடராஜன், ம.சங்கிலிமுத்து, பெ.பாபு, வி.சி.வில்வம் ஆகி யோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தஞ்சாவூரில் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவில் தோழர்கள் அதிகளவு கலந்து கொண்டு சிறப்பிக்க முடிவு செய்யப்படுகிறது.
திருச்சியில் அக்டோபர் 20 ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குப் பிரச் சார ஊர்தி வழங்கும் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.
வேன் வழங்கும் நிகழ்ச்சியைத் திருச்சியில் நடத்த அனுமதி வழங்கிய தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களுக்குத் திருச்சி மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நிகழ்ச்சிக்கு நன்கொடை வழங்கியோர்
வி.சி.வில்வம் - 5,000
வெ.ரூபியா - 1,000
ரெஜினா பால்ராஜ் - 2,000
பி.மலர்மன்னன் - 5,000
சு. சாந்தி 500
நன்கொடை வழங்க ஒப்புக் கொண்டோர்:
ஜெயில் பேட்டை தமிழ்மணி - 5,000
ஆசிரியர் நடராஜன் - 25,000
துறையூர் மாவட்டக் கழகம் சார்பாக ச.மணிவண்ணன் 1,00,000 (ஒரு இலட்சம்).
.................
ஒருங்கிணைப்புக் குழு: வீ.அன்புராஜ்,
இரா.ஜெயக்குமார், பேராசிரியர் ப.சுப்பிரமணியன்
வரவேற்புக் குழு: தலைவர்: ஞா.ஆரோக்கியராஜ், செயலாளர் - மு.சேகர்.
துணைத் தலைவர்கள்: ப.ஆல்பர்ட், தே.வால்டேர், ச.மணிவண்ணன்
துணைச் செயலாளர்கள்: இரா.மோகன்தாஸ், ஆ.அங்கமுத்து, ஜெ.தினேஷ்பாபு
பொருளாளர்: வி.சி.வில்வம்
உறுப்பினர்கள்: ச.கண்ணன், கல்ப்பாக்கம் இராமச் சந்திரன், அண்ணாதுரை, தேவா, ந.அறிவுச்சுடர், குழந்தை தெரசா, பி.என்.ஆர்.அரங்கநாயகி, அட்டலிங்கம், கு.பொ.பெரியசாமி, ஆர்.கே.இரவிச்சந்திரன், பா.இன்பராஜ், ஆ.வான்முடிவள்ளல், ம.ஆறுமுகம், ஆன்டிராஜ், அசோக் குமார், ஆசைத்தம்பி, பனிமலர் செல்வம், வ.மாரியப்பன், இராதமிழ்ச்சுடர், பாலச்சந்திரன், திருஞானம், மணிவேல், பாலமுருகன், அசோக், ரமேஷ், நடராஜன், செபாஸ்டின்.
வசூல் மற்றும் விளம்பரக் குழு: மகாமணி, தமிழ்மணி, ஜெயராஜ், சாந்தி, வசந்தி, சங்கீதா, அமுதா, ரூபியா, கனக ராஜ், சங்கிலிமுத்து, முருகன், இராஜசேகர், பிரவீன்குமார், கருப்பு கோகுல், நேதாஜி, இராமதாஸ், பேபி, அண்ணா துரை, மருதை, கணேசன்.
No comments:
Post a Comment