கருநாடக மாநில காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கருநாடக அமைச்சரவையில் கிட்டத்தட்ட அனைவருமே பகுத்தறிவுச் சிந்தனை கொண்டவர்கள். வருணாசிரம எதிர்ப்புக் கொள்கையைக் கொண்டவர்கள்.
கருநாடக அமைச்சர் பிரியங் கார்கே ‘பிராமணர்'கள் என்ற பெயரை வைத்துக்கொண்டு ‘சூத்திரர்'களை மறைமுகமாக இழிவுபடுத்துவது குறித்து பல பொதுக்கூட்ட மேடைகளில் பேசிவருகிறார்.
அவர்கள் ஆட்சியில் இருக்கும் மாநிலத்தில், அமெரிக்க ரிடர்ன் பார்ப்பனர் ஒருவர் பெங்களூருவில் ‘‘நம்ம பிராமின்ஸ் இட்லிகடை'' என்று ஒன்றைப் புதிதாகத் திறந்துள்ளார்.
மயிலாப்பூரில் விதைத்து, அம்மாமிகள் நாற்றுப்பாவி, பார்ப்பனப் புருஷர்கள் அறுவடை செய்து, மாம்பலத்தில் அரிசியாக்கி அவாளே கொத்தி செய்த ஆட்டுக்கல்லில் மாவாட்டி அந்த மாவில் சுட்டு விற்கப்படும் இட்லியா என்று கேட்கத் தோன்றுகிறது?
தமிழ்நாட்டில் 'பிராமணாள்' காபி கிளப் என்று போர்டு வைத்து வியாபாரம் செய்த காலம் ஒன்று இருந்ததுண்டு.
அவர்கள் பிராமணர்கள் என்றால், நாம் எல்லாம் சூத்திரர்கள் என்பதை மறைமுகமாகச் சுட்டுகிறார்கள். சூத்திரர்கள் என்றால் விபச்சாரி மகன் என்ற பொருள் உள்படஏழு வகைப்படுவர்.
தந்தை பெரியார் அறிவித்த தன்மானப் போராட்டத்தின் அடிப்படையில் ‘‘பிராமணாள்'' போர்டை திராவிடர் கழகத் தோழர்கள் அழித்ததால், ‘பிராமணாள்' ஒழிந்தது.
கருநாடகத்திலும் உணர்ச்சி பரவுமா? பரவத்தான் வேண்டும்!
எங்கே பார்ப்போம்!
- மயிலாடன்
No comments:
Post a Comment