அமெரிக்கன் காலேஜ் ஆஃப் காஸ்ட்ரோஎன்டாலஜி (ACG) அமைப்பின் சார்பில் 'மெட் இந்தியா' மருத்துவமனை நிறுவனரும், இரைப்பை குடலியல் தலைமை மருத்துவ நிபுணருமான மருத்துவர் டி.எஸ்.சந்திரசேகர் காஸ்ட்ரோ என்ட்ராலஜிஸ்ட்களின் இந்தியாவிற்கான கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான செய்திக் குறிப்பில், “கனடாவின் முக்கிய மாகாணமான பிரிட்டிஸ் கொலம்பியாவின் வான்கூவரில் 22.10.2023 அன்று அமெரிக்கன் காலேஜ் ஆஃப் காஸ்ட்ரோஎன்ட்ராலஜி அமைப்பின் மருத்துவ சங்கத்தின் ஆண்டுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள குடலியல் மற்றும் இரைப்பை மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண் டனர். இந்த கூட்டத்தில் காஸ்ட்ரோஎன்ட்ராலஜிஸ்ட்களின் பன்னாட்டு மருத்துவ அமைப்பின் (கிசிநி) இந்தியாவின் கவர்னராக மருத்துவர் டி.எஸ்.சந்திரசேகர் தேர்ந்தெடுக்கப் பட்டு 2023-ஆம் ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு கவர்னராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டது.
இவர் குடலியல் மற்றும் இரைப்பை தொடர்பான மருத்துவ ஆய்வுகள், மருத்துவத்துறையில் மேம்பாட் டிற்கான திட் டங்கள், உலகம் முழுவதும் நடைபெறும் மருத்துவச் சிகிச்சைக்கான உரிய ஆலோசனைகள் மற்றும் புதிய பாடத் திட்டம் போன்றவற்றை மேற்கொள்ள இவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
காஸ்ட்ரோஎன்ட்ராலஜிஸ்ட்களின் பன்னாட்டு மருத்துவ அமைப்பு (அமெரிக்கன் காலேஜ் ஆஃப் காஸ்ட் ரோஎன்ட்ராலஜி) 1932 ஆம், ஆண்டு கட்டமைக்கப்பட்டது. இதில் உலகம் முழுவதிலும் 86 நாடுகளில் இருந்து குடலியல் மற்றும் இரைப்பை தொடர்பான 14000 மருத்துவ நிபுணர்கள் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment