மகளிர் உரிமைத்தொகை - பதிவு செய்ய மீண்டும் வாய்ப்பு! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 11, 2023

மகளிர் உரிமைத்தொகை - பதிவு செய்ய மீண்டும் வாய்ப்பு! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

சென்னை, அக். 11- மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித் தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை யில் நேற்று (10.10.2023) நேர மில்லா நேரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்  கொண்டுவரப் பட்டது. அப்போது நடந்த விவாதம்: 

அதிமுக உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார்

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 கொடுக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந் துள்ளது. தமிழ்நாடு முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்களி லும், கோட்டாட்சியர் அலுவ லகங்களிலும் பெண்கள் ஒரு கையில் குழந்தையை வைத்துக் கொண்டும், ஒரு கையில் செல் போனை வைத்துக் கொண்டும் எங்களுக்கு இன்னும் குறுஞ்செய்தி வரவில்லை என்கின் றனர். உரிமைத் தொகை ஏழை மக்களுக்கு வழங்குவதாக அறி விக்கப்பட்டது. ஆனால், நடை முறையில் வசதி படைத்த குடும்பத் தலைவிகள் உரிமைத் தொகை பெற்றிருப்பதாக தக வல் வருகிறது.

பேரவைத் தலைவர் மு.அப்பாவு

உரிமைத் தொகை 1.06 கோடி பேருக்கு கொடுக்கப்படு கிறது. "எங்கும் எனக்கு கொடுக் கவில்லை. என்னைவிட வசதி யானவர்களுக்கு கொடுக்கப் பட்டுள்ளது" என்று தெரிவிக்க வில்லை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உரிமைத் தொகையை ஒரு கோடி பேருக்கு குறையாமல் கொடுப்போம் என்று ஆரம் பத்தில் சொன்னோம். 1.06 கோடி பேருக்கு உரிமைத் தொகை கொடுக்கப்படுகிறது. தகுதியிருந்தும் கிடைக்காத வர்கள் மேல்முறையீடு செய்ய லாம் என்று அறிவித்திருக்கி றோம்.

மேல்முறையீடு செய்து வரு கின்றனர். இதுவரை 9 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள் ளனர். அதனையும் பரிசீலனை செய்து உரிமைத் தொகை கொடுக்கப்படும். தகுதியிருந் தும் எனக்கு உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்று உங் களிடம் தெரிவிப்பவர்களின் விவரங்களை எங்களிடம் கொடுத்தால், நிச்சயமாக உரி மைத் தொகை வழங்கப்படும். அவர்கள் அதிமுக அல்லது வேறு கட்சி என்று பார்க்க மாட்டோம். எந்த கட்சியாக இருந்தாலும் தகுதியானவர்க ளுக்கு உரிமைத் தொகை வழங் கப்படும்.

அதிமுக உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார்

தி.மு.க. தேர்தல் அறிக்கை யில் அனைத்து குடும்ப அட் டைதாரர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பேரவைத் தலைவர் மு.அப்பாவு

உங்கள் வீட்டுக்கு மாதம் ரூ.1,000 வேண்டுமா? மனசாட் சியை தொட்டு பேசுங்கள். சாமானிய மக்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.

அதிமுக உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார்

எங்கள் ஆட்சியில் பொங் கல் பரிசு தொகுப்பு திட்டம் குடும்ப அட்டை வைத்துள்ள 2.18 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பொங்கல் என்பது ஆண் டுக்கு ஒருமுறை. உரிமைத் தொகை என்பது மாதந் தோறும். அதனால் தான் தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் கொடுக்க முடிவு செய் தோம். நாங்கள் வந்தபோது நிதிநிலைமை சரியாக இருந்திருந் தால் உடனே உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கியிருப்போம். 

தகுதியானவர்களை கண்ட றிய தாமதம் ஏற்பட்டது. குறை கள் இருந்தால் ஆதாரத்தோடு சொல்லுங்கள். நாங்கள் நடவ டிக்கை எடுக்கவில்லை என் றால் கேளுங்கள்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

உரிமைத் தொகை 1 கோடியே 6 லட்சத்து 198 மகளிருக்கு கொடுக் கப்படுகிறது. நிபந்தனைகளை தளர்த்தியதால் மாற்றுத் திற னாளிகளுக்கான உதவித் தொகை பெறும் 2 லட்சத்து 6 ஆயிரம் பேரின் குடும்பத்தின ரும், முதியோர் உதவித்தொகை பெறும் 4 லட்சத்து 72 ஆயிரம் பேரின் குடும்பத்தினரும் உரி மைத் திட்டத்தில் பயன் பெற் றுள்ளனர்.

பொதுவாக எந்த திட்டத்தி லும், திட்டப் பயனாளிகள் தேர்வு குறித்து மேல்முறையீடு செய்வதற்கு வழிவகை இருக் காது. ஆனால் கலைஞர் மக ளிர் உரிமைத் தொகை திட் டத்தில் மேல்முறையீடு செய் வதற்கும் வழிவகை செய்யப் பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இதுவரை 9 லட்சத்து 24 ஆயிரம் மேல்முறையீட்டு மனுக் கள் வந்துள்ளன. இந்தமனுக்களை சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர்கள் ஆய்வுசெய்து, நவ. 30-க்குள் உரிய தீர்வை அளிப்பார் கள்.

ஏற்கெனவே விண்ணப்பிக் காதவர்களும் இந்தத் திட்டத் தில் விண்ணப்பிக்கலாம். அதற்கான அறிவிப்பு விரை வில் வெளியிடப்படும். எந்த வொரு தகுதியான பயனாளியும் விடுபட்டு விடக்கூடாது என்ப தில் இந்த அரசு உறுதியாக உள்ளது.

No comments:

Post a Comment