கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
4.10.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* அரசமைப்புச் சட்டம் இட ஒதுக்கீடு வழங்குகிறது. பயனாளிகள் குறித்த தரவுகளுக்கு ஜாதிவாரி கணக் கெடுப்பு அவசியம் என்கிறது தலையங்க செய்தி.
* மோடி ஒரு ஏமாற்றுப் பேர்வழி; பொய்யை உருவாக்கும் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் என பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவர் கே.டி.ராமராவ் கடும் கண்டனம்.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* சேது பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரும் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஜாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் நேர்மையான அரசியல் இருக்காது என்கிறார் சதீஷ் தேஷ்பாண்டே.
* பீகார் ஜாதிவாரி கணக்கெடுப்பு இட ஒதுக்கீட்டில் புதிய வரலாறு எழுதும் என்கிறார் ஜே.டி.யு மேனாள் எம்.பி. கே.சி.தியாகி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பீகார் ஜாதிவாரி கணக்கெடுப்பு, உ.பி.யில் இதே போன்ற நடைமுறையை கோருவதற்கு எதிர்க்கட்சிகளை யும் பாஜக கூட்டணியையும் தூண்டுகிறது.
* நீதித்துறை சேவைகள் மற்றும் சட்டக் கல்லூரிகளில் உயர்ஜாதி அரியவகை ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக் கீட்டை பீகார் அரசு அறிவித்துள்ளது.
தி ஹிந்து:
* எப்போதெல்லாம் இந்து ஒற்றுமை முழக்கம் மேலெழுந்ததோ, அப்போதெல்லாம் பாஜக வெற்றி பெற்றது; எப்பொழுதெல்லாம் சமூக நீதி கேள்வி மேலே வந்தாலும், அது பின்னடைவை சந்தித்தது என்கிறார் கட்டுரையாளர் வர்கீஸ் கே.ஜார்ஜ்.
* உயர்ஜாதி அரியவகை ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பு, பிற்படுத் தப்பட்டோருக்கு 50 சதவீத உச்ச வரம்பை நீக்க கோரு வதற்கு, பீகார் ஜாதி வாரி புள்ளி விவர கணக்கெடுப்பு (சர்வே) உதவும் என்கிறார் கட்டுரையாளர் கிருஷ்ணதாஸ் ராஜகோபால்.
* தன்னை பிற்படுத்தப்பட்டவர் எனக் கூறும் பிரதமர் மோடி ஜாதிவாரி கணக்கெடுப்பு ஏன் நடத்தவில்லை என காங்கிரஸ் கேள்வி
தி டெலிகிராப்:
* தன்னை விளிம்புநிலை மக்களுக்கு ஆதரவாளராக காட்டும் பாஜகவின் நிலையை பீகார் ஜாதி வாரி கணக்கெடுப்பு சர்வே ஆட்டம் காண செய்கிறது என்கிறது தலையங்க செய்தி.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பீகாரை தொடர்ந்து ஒடிசாவும் ஓபிசிகள் குறித்த கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட திட்டமிட்டு உள்ளது.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment