சென்னை, அக் 12. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மோட்டார் வாகனங்களுக்கான வரி, வாழ்நாள் வரி உயர்வு தொடர்பான மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்டது.
சட்டப்பேரவையில் போக்குவ ரத்து துறை தொடர்பான மசோ தாவை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று (11.10.2023) அறிமுகம் செய்தார்.
அதில் கூறியிருப்பதாவது: போக்கு வரத்து துறையில் 2012ஆ-ம் ஆண் டுக்கு பிறகு வரிகள் உயர்த்தப் படவில்லை. எனவே,வரி விதிப்பு முறைகளில் திருத்தம்செய்ய அரசு முடிவு எடுத்துள்ளது. இதன் படி, அனைத்து வகை வாகனங்களுக் கும் புதிய வரி நிர்ணயிக்கப்படு கிறது. வாடகை பயணிகள் போக்கு வரத்து வாகனங்களில், சுற்றுலா மற்றும் ஒப்பந்த வாகனங் களுக்கு காலாண்டு வரி ரூ.4,900,
35 பேருக்கு மேல் பயணித்தால் ரூ.3 ஆயிரம், படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை வரி உயர்கிறது. சென்னை, மதுரை, கோவை நகர சுற்றுப் பகுதிகளில் இயக்க அனுமதிக்கப் பட்ட பிரத்யேக பேருந்துகளுக்கு மேல்வரி விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்து, வாடகை வாகனங்களுக்கு 5 ஆண்டு வரியாக ரூ.1,400 முதல் ரூ.6 ஆயிரம் வரை பயணி எண்ணிக்கை அடிப்படை யில் வரி உயர்த் தப் படுகிறது.
கல்வி நிறுவனங் களின் மாண வர்கள், பணியாளர் களுக்கான பேருந்து களுக்கு 7 நாட் களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.45, பிற நிறு வனங்களின் பணியாளர் போக்கு வரத்துக்கான வாகனங் களுக்கு 7 நாட்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.100 என வரி விதிக்கப்படுகிறது. புதிய இருசக்கர வாகனங்களுக் கான வாழ்நாள் வரி, ரூ.1 லட்சம் வரை 10 சதவீதம், 1 லட்சத்துக்கு மேல் இருந்தால் 12 சதவீதம் என நிர்ணயிக்கப்பட் டுள்ளது. பழைய இருசக்கர வாகனங்களுக்கு ஒரு ஆண்டு பழையது என்றால் ரூ.1 லட்சம் வரை விலைக்கு 8.25 சத வீதம், அதற்கு மேல் 10.25 சதவீதம், 2 ஆண்டு வரை பழையதாக இருந் தால் ரூ.1 லட்சத்துக்கு 8 சதவீதம், அதற்கு மேல் 10 சதவீதம் என வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2 முதல் 11 ஆண்டுகளுக்கு மேல் ஓடிக் கொண்டிருக்கும் இரு சக்கர வாகனங்களுக்கு விலைக்கு ஏற்ப 6 முதல் 9.75 சதவீதம் வரை வாழ்நாள் வரி விதிக்கப்படுகிறது.
புதிய இருசக்கர வாகனங்களில் ரூ.5 லட்சம் வரை விலை இருந்தால் 12 சதவீதம், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 13 சதவீதம், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை 18 சதவீதம், ரூ.20 லட்சத்துக்கு மேல் இருந்தால் 20 சதவீதம் என வாழ்நாள் வரி விதிக்கப்படுகிறது.
இந்த 4 விதமான விலை அடிப் படையில், ஓராண்டு முதல் 11 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கும் இருசக்கர வாகனங்களுக்கான வாழ்நாள் வரி, அதன் விலையில் 8 முதல் 18.75 சதவீதம் வரை நிர்ண யிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, 15 ஆண்டுகள் நிறை வடையாத இரு சக்கர வாகனங் களுக்கு 5 ஆண்டு களுக்கான பசுமை வரிரூ.750, மற்ற மோட்டார் வாகனங் களுக்கு ரூ.1,500 என நிர்ணயிக்கப்பட் டுள்ளது.
புதிய வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரி இருசக்கர வாகனங்களுக்கு ரூ.375, இலகுரக வாகனங்களுக்கு ரூ.2,250,மற்ற வாகனங்களுக்கு ரூ.3 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது. குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேறியது.
No comments:
Post a Comment