இதுதான் பகவான் சக்தியோ? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 25, 2023

இதுதான் பகவான் சக்தியோ?

நேபாளத்தில் 12 இந்திய பக்தர்கள் விபத்தில் படுகாயம்

காத்மாண்டு, அக். 25- விஜயதசமியை முன்னிட்டு இந்தியாவில் இருந்து 12 பேர் கொண்ட பக்தர்கள் குழு நேபாளம் காத்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள ஒரு கோவிலுக்கு பக்திப் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் சென்ற கார் பிர்குஞ்சில் இருந்து காத்மாண்டு நோக்கி சென்று கொண்டு இருந்தது. 

மகாவன்பூர் மாவட்டம் மாடதீர்த்தா பகுதி அருகே வரும்போது கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் 3 குழந்தைகள் உள்பட 12 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் காத்மாண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காவல் துறையினர் கார் ஓட்டுநர் அனில்குமார் (வயது 25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment