நாகர்கோவில், அக். 1- தந்தை பெரியாருடைய பிறந்த நாளான செப்டம்பர் 17 காலை 10 மணிக்கு நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திரா விடர் கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம், தலைமை யில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது.
மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன், முன்னிலை வகித்தார். பொதுக்குழு உறுப்பி னர்கள் ம.தயாளன் மா.மணி, திராவிடர்கழக காப்பாளர்
ஞா. பிரான்சிஸ், மாவட்ட கழக துணைத் தலைவர் ச.நல்ல பெரு மாள், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ. சிவ தாணு, மாவட்ட கழக துணைச் செயலாளர் சி. அய்சக் நியூட்டன் மாவட்ட மகளிரணி தலைவர் சு. இந்திராமணி, செயலாளர் மஞ்சு குமாரதாஸ், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழக தலைவர் எஸ். குமாரதாஸ், தோவாளை ஒன்றிய கழக தலைவர் மா.ஆறுமுகம் இலக்கிய அணி செயலாளர் பா. பொன்னுராசன்; மாநகர கழக தலைவர் ச.ச. கருணாநிதி, செயலாளர் மு.இராஜசேகர், துணைத்தலைவர் கவிஞர் ஹ.செய்க்முகமது, கழக இளைஞரணி மாவட்டத் தலை வர் இரா. இராஜேஷ், அமைப்பா ளர் ம.தமிழ்மதி பகுத்தறிவா ளர் கழக மாவட்ட செயலாளர் பெரியார் தாஸ், அமைப்பாளர் இரா.லிங்கேசன், கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ், கழகத் தோழர்கள் மு.குமரிச்செல்வர், பா.சு.முத்து வைரவன், முத்து, கு.சந்திரன், பி. கென்னடி, மு.இராஜன் பால கிருஷ்னன், தமிழ் அரசன், ம.தமிழ் இலக்கியா, பொன்.எழில் திமுக தொழிற்சங்க அமைப் பாளர் இளங்கோ, திராவிட நட்புக்கழக பொறுப்பாளர்கள் ஆனந்த், விஷ்ணு மற்றும் பலரும் கலந்து கொண்டனர். தோழர் களுக்கு மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தேநீர் விருந்துடன் இனிப்புப் பண் டங்கள் வழங்கி உபசரித்தார். பொதுமக்களுக்கு இனிப்புகள் தந்தை பெரியாருடைய நூல்கள், துண்டறிக்கைகள் வழங்கப்பட் டன.
கழகத் தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். தோவாளை ஒன் றியம் செண்பகராமன் புதூர், அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் குல சேகரன் புதூர் இலட்சுமிபுரம், கலிங்கராஜபுரம் ஆகிய இடங் களில் உள்ள பெரியாருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மார்த்தாண்டம், கன்னியாகுமரி, கோட்டாறு, வடசேரி, சுசீந்தி ரம், திங்கள்நகர், நெய்யூர் மற்றும் குமரிமாவட்டம் முழுவதும் தந்தை பெரியாருடைய பிறந்த நாள் எழுச்சியுடன் கொண்டா டப்பட்டது.
No comments:
Post a Comment