பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 17, 2023

பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

காரைக்குடி, அக். 17- சிவகங்கை மாவட்டம், காரைக்குடி உமையாள் இராமநாதன் மகளிர் கலைக்கல்லூரியில் 14.10.2023 அன்று தமிழ் நாடு மாநில ஊரக வாழ் வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட் டும் மய்யம் இணைந்து நடத்திய, தனியார் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் விழாவில், தேர்வு செய்யப் பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை களை, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித், அவர்கள் வழங்கினார். உடன் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் கா.வானதி, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சரண்யா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் பா.இராஜ லெட்சுமி, மணிகணேஷ், காரைக்குடி உமையாள் இராமநாதன் மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் ஹேமமாலினி உட்பட துறை சார்ந்த அலுவலர் கள் மற்றும் இளைஞர்கள் உட்பட பலர் உள்ளனர்.


No comments:

Post a Comment