"பெரியாரை-பெண்களுக்கு பிடிக்கும் ஏன்?" பேச்சுப் போட்டியில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 4, 2023

"பெரியாரை-பெண்களுக்கு பிடிக்கும் ஏன்?" பேச்சுப் போட்டியில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

கீழ்வேளூர், அக். 4 - நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பாக அரசாணிக்குளம், தந்தை பெரியார் சிலை அருகில் செப்டம்பர் 17 அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 145ஆவது பிறந்தநாள் விழாவும் "பெரியாரை பெண்களுக்கு பிடிக்கும் ஏன்?" என்ற தலைப்பில் பேச்சு போட்டியில் வெற்றிப்பெற்ற அஞ்சுவட்டத்தம்மன் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி மாண விகளுக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் பாவா.ஜெயக் குமார் தலைமையில், மாவட்ட இளை ஞரணி செயலாளர் பாக்கியராஜ் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் தாட்கோ தலைவரும், மேனாள் அமைச்சருமான உ.மதி வாணன் கலந்துகொண்டு சிறப் புரை ஆற்றியதுடன் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். 

இந்நிகழ்வில் தி.மு.க. ஒன்றிய குழு தலைவர், வாசுகி நாகராஜன், பேரூராட்சி மன்ற தலைவர், இந்திராகாந்தி சேகர், மருத்துவர். குரு இராஜவர்மன், பேரூர் ம.தி. மு.க. உறுப்பினர், காந்திமதி சிறீ தரன், புத்தர் பன்னாட்டு பேரவை தலைவர், எஸ்.டி.ஜெயராமன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர், அங்காடி சேகர், அரிமா சங்க மாவட்ட செயலாளர், தங்க மோகன், செந்தில் வேலவன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் அணி தலைவர் சண்முக சுந்தரம், மகாலெட்சுமி சண்முகசுந் தரம். சுற்றுச்சூழல் மற்றும் பசுமை புரட்சி இயக்க எஸ்.முருகேசன் மற்றும் மாவட்ட நகர நிர்வாகிகள், கீழ்வேளூர் ஒன்றிய கழக தலைவர் வேணுகோபால், கழக ஒன்றிய செயலாளர் அ.பன்னீர்செல்வம், கழக மாவட்ட துணை செயலாளர் இராமலிங்கம், கழக மாவட்ட மகளிர் அணி செயலாளர் இரா. பேபி, கழக பொதுக்குழு உறுப்பி னர் கமலம், குருக்கத்தி தமிழ்ச் செல்வம், காத்தமுத்து, ம.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் எஸ்.சிறீதரன், இராஜஸ்தானை சேர்ந்த பவானிகீஸர் எலக்ட்ரிக்கல் உரி மையாளர்கள் கலந்துகொண்டு தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், 

அதே போன்று விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக மெக்கானிக் அசோக் மற்றும் ஸ்டிக்கர் திரா விடச்செல்வம், மெக்கானிக் நக்கீ ரன், அப்பாஸ் சந்தோஷ், நெல். தன்மான தமிழன் மற்றும் ஏராள மானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித் தனர்.

இந்நிகழ்வை கீழ்வேளூர் முத்து ராஜா, கீழையூர் ஒன்றியச் செயலா ளர் மடிப்பாக்கம் சேட் என்கிற சி.தமிழரசு ஆகியோர் ஒருங்கி ணைத்தனர்.

No comments:

Post a Comment