மதுரையில் எழுச்சியுடன் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 11, 2023

மதுரையில் எழுச்சியுடன் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டம்

மதுரை, அக். 11- மதுரை மாநகர் மாவட்ட கலந்துரையாடல் கூட் டம் 10, 08.10.2023 ஞாயிறு மாலை 7மணிக்கு தமிழக எண்ணெய் பலகாரம் நிறுவனத்தில் மாவட்ட  தலைவர் அ.முருகானந்தம் தலைமை யில் நடைபெற்றது. தமிழர் தலை வர் ஆசிரியர் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ள இருக்கின்ற விஸ்வ கர்மா யோஜனா நவீன குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து நடத்த இருக்கும் பிரச்சார பயண நிறைவு கூட்டத்தை மதுரையில் சிறப்பாக நடத்துவது தொடர்பாக நடை பெற்றது.

தொடக்கவுரையாக கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா ஜெயக்குமார்  கலந்துகொண்டு பயணத்தின் நோக்கம் செயலாற்றக் கூடிய விதம் நிகழ்ச்சி சிறப்பாக அமைய என்னென்ன செய்ய வேண்டும் என்பதை காரண காரி யங்களோடு எடுத்துரைத்தார். அத் துடன் இக்காலகட்டத்தில் தமிழர் தலைவர் எடுத்து வைக்கக் கூடிய ஒவ்வொரு அடியையும் நிகழ்வு களையும் சுவைபட எடுத்துரைத் தார். 

2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றிபெற இப்பயணம்உறுதுணையாக இருக்கும் என்றும் அத்துடன் தமிழ்நாடு கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்து நம் நோக்கங்களை தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரக் களமாக்கி வருகிறார் என்று எடுத் துரைத்தார் மாவட்ட கழகத்தினு டைய தலைவர் முருகானந்தம் உசிலை மாவட்ட தலைவர் தம. எரிமலை, சுப.பெரியார்பித்தன். உசிலைமாவட்ட செயலாளர் பா. முத்து கருப்பன், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் சுப.முரு கானந்தம், மேலூர்மாவட்ட செய லாளர் .ஜெ.பாலா பகுதி பொறுப் பாளர்கள் தோழர் காளியப்பன் மாவட்ட துணைத் தலைவர்.பொ. பவுன்ராஜ் மாவட்ட துணைச் செயலாளர் இரா.லீ சுரேஷ், மு மாரிமுத்து, வேல்துரை எபி.சாமி நாதன், மகளிர் அணி பொறுப் பாளர்கள் பாக்கியலட்சுமி, ராக்கு, தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம், மாவட்ட காப்பாளர் சே. முனியசாமி ஆகியோர் முழு ஒத்துழைப்பு வழங்க உறுதியளித் தனர்.

காப்பாளர் தே.எடிசன்ராஜா, ஒலி ஒளிஅமைப்பு மற்றும் இருக்கை ஏற்பாடுகளை செய்து கொடுக்க ஏற்றுக்கொண்டார்.

மாணவர் கழக அமைப்பாளர் தேவராஜ்பாண்டியன்கருத்து களை வழங்கி நன்றி கூறினார்.

கூட்டத்தில் உச்சப்பட்டி பாஸ்கரன், செல்லத்துரை, ரமேஸ், கோரா, முரளி, கலைச்செல்வி, மற்றும் ஓட்டுநர் தியாகராசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment