சேரன்மகாதேவி முப்பெரும் விழாவில் சட்டப்பேரவை மேனாள் தலைவர் ஆவுடையப்பன் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 17, 2023

சேரன்மகாதேவி முப்பெரும் விழாவில் சட்டப்பேரவை மேனாள் தலைவர் ஆவுடையப்பன் கருத்து

 சேரன்மகாதேவி போராட்டக் களத்தில் முகிழ்த்த புதுமலராம் திராவிடர் இயக்கம்! 

தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார்

சேரன்மகாதேவி, அக்.17- சேரன் மகாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு விழா! தி.மு.கழக அறச் செம்மல் பத்தமடை ந. பரமசிவம் அவர்களுக்கு பாராட்டு விழா! தாய்வீட்டில் கலைஞர், வைக்கம் போராட்ட வரலாறு! சேரன்மகா தேவி குருகுல போராட்ட வரலாறு நூல்கள் வெளியீட்டு விழா! என முப்பெரும் விழா 16.10.2023 அன்று மாலை 6 மணிக்கு சேரன்மகாதேவி பேருந்து நிலை யம் அருகில் நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அமைச்சர் பெருமகனார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தந்தை பெரியார் படத்தினை சட்டப்பேரவையின் மேனாள் தலைவர் ஆவுடையப்பன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலை வர் ச.இராசேந்திரன் தலைமை வகிக்க, மாவட்டச் செயலாளர் இரா. வேல்முருகன் அனை வரையும் வரவேற்று பேசினார். மேனாள் அமைச்சரும், தி.மு.க. மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன் கான் வாழ்த்துரை வழங்கினார். 

தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைத்து மாவட்ட தி.மு.க. செயலாளரும், சட்டப்பேரவை மேனாள் தலைவர் இரா. ஆவுடை யப்பன் அவர்கள் உரையாற்றினார்.  அவரது உரையில்  சேரன்மகாதேவி போராட்டம் நடந்த காரணத்தால் தான் திராவிட இயக்கங்கள் உருவாயின. திராவிட மாடல் அரசு உருவாயின என பல்வேறு கருத்துகளை எடுத்துக் கூறினார்.

அதேபோல் சேரன்மகாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தும், தாய்வீட்டில் கலைஞர், வைக்கம் போராட்ட வரலாறு, சேரன்மகா தேவி போராட்டம் உள்ளிட்ட மூன்று நூல்களை மாண்புமிகு நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டு உரையாற்றினார். 97 வயதான பத்த மடை ந.பரமசிவம் சிறிது நேரம் நெகிழ்ச்சியரை ஆற்றினார்.

முன்னதாக அமைச்சர் பெருமகனாரும், பத்தமடை ந.பரம சிவமும், அனைத்துக் கட்சித் தோழர்களுக்கு பயனாடை அணி வித்தும், புத்தகங்களை வெளியிட்டும் முடிக்கப்பட்டிருந்தது. அனைத்துக் கட்சியைச் சார்ந்த ஏராளமான தோழர்கள் புத்தகங் களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சென்றனர்.

ஆசிரியருக்கு பத்தமடைப் பாய் உள்ளிட்ட பொருட்களை ஆசையுடன் வழங்கி தோழர்கள் இன்புற்றனர். இறுதியாக ஆசிரியர் பேசினார். 

"பத்தமடை பாய்" - தமிழர் தலைவருக்கு பத்தமடை பரமசிவம் அன்பளிப்பாக வழங்கினார்

நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்த திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தலைமைக் கழக அமைப்பாளர்கள் மதுரை வே.செல்வம், இராசபாளையம் இல.திருப்பதி, கழகக் காப்பாளர் கள் இரா.காசி, தூத்துக்குடி சு.காசி, தூத்துக்குடி மா.பால்ராசேந்திரம், நெல்லை சி.வேலாயுதம் ஆகியோரும்  தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் எம்.கிரகாம்பெல், திரு நெல்வேலி மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீசு, தலைமை செயற்குழு உறுப்பினரும் மேனாள் சட்டமன்ற உறுப்பின ருமான ந.மாலை ராசா, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர், வழக்குரைஞர் ஆ.பிரபாகரன், சேரன்மகாதேவி தி.மு.க. ஒன்றியச் செயலாளர் பிரபு, சேரன்மகாதேவி நகரச் செயலாளர் மணிஷா செல்வ ராசு, நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் விஜிலா சத்தியானந்த், மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் ஆவின் ஆறுமுகம், நாங்குநேரி ஒன்றிய செயலாளர் சுடலைக்கண்ணு, தவசி மணிகண் டன், புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ரெய்மண்ட், பகுத்தறி வாளர் கழக மாநில அமைப்பாளர் கே.டி.சி. குருசாமி, தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த. வீரன், மாவட்டச் செயலாளர் வே.முருகன், திராவிடர் கழக தூத்துக்குடி மாவட்டத் தலைவர் மு.முனிய சாமி, மாவட்டச் செயலாளர் கோ.முருகன், கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், செயலாளர் கோ.வெற்றிவேந்தன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ. சவுந்திரபாண்டியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சு. இனியன், மாவட்ட இளைஞரணித் தலைவர் வீரபாண் டிய கட்டபொம்மன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் மு.தமிழ்ச் செல்வம், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் செ.சூர்யா, காங்கிரஸ் கட்சியின் மேனாள் ஒன்றிய அமைச்சர் இரா. தனுஷ்கோடி ஆதித்தன், கழகச் சொற்பொழி வாளர் பிராட்லா என்னாரெசு, பா.சிவகுமார், உடுமலை வடி வேல், கமலேஷ், அருள் மணி, சிரஞ்சீவி, யுகேஷ். இறுதி யில் சேரன்மகாதேவி திராவிடர் கழக ஒன்றியத் தலைவர் கோ.செல்வராசு நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.


விழா சிறக்க பங்காற்றியவர்களுக்கு 

தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டு

No comments:

Post a Comment