ஆத்தூரில் அணிவகுத்த ஆசிரியர்கள்..! பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் பொதுக்கூட்டம்..! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 30, 2023

ஆத்தூரில் அணிவகுத்த ஆசிரியர்கள்..! பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் பொதுக்கூட்டம்..!

ஆத்தூர், அக். 30- ஆத்தூர் நகரில் பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் தந்தை பெரியார் 145ஆவது பிறந்தநாள் விழா, கலைஞர் 100ஆவது- ஆண்டு விழா, ஏ.வி.தங்கவேல் அவர்களின் 102ஆவது பிறந்தநாள் விழா என்று முப்பெரும் விழாவாக 20.10.2023 அன்று கொண்டா டப்பட்டது.

ஆசிரியர்கள் மாணவர்களுக்காக 

களம் காண வேண்டும்.!

தமிழ்நாடு முழுவதும் பகுத் தறிவு ஆசிரியர் அணி சார்பில் அறிவார்ந்த கருத்தரங்குகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. 

அதன் தொடர்ச்சியாக ஆத்தூர் மாவட்ட கருத்தரங் கினை அரங்கக் கூட்டமாக அன்றி மக்கள் மன்றத்தில் பொதுக்கூட்டமாக ஏன் நடத் தக் கூடாது என்று யோசித்து அதற்கான திட்டத்தில் ஆத் தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியர் அணி தோழர்கள் களத்தில் இறங்கினர். 

அனைத்து ஆசிரிய நண்பர் களின் இல்லத்திற்கே சென்று பகுத்தறிவு ஆசிரியர் அணி பற்றி எடுத்து கூறி ஆசிரியர் களாகிய நாம் தங்களின் சொந்த பிரச்சினைக்காக மட்டுமன்றி இன்றைய  கல்விச் சூழலில் மாணவர்களை பாதிக் கும் நவீன குலக்கல்வி திட்ட மாக விளங்கும் மனுதர்ம யோஜானா போன்ற திட்டங் களை எதிர்த்தும் நாம் களம் காண வேண்டும் என்று விளக்கி கூறி பொது கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

பொதுக்கூட்ட நிகழ்விற்கு பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட தலைவர்   பழனிவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மாயக்கண்ணன் அனைவரையும் வரவேற்று உரை ஆற்றினார்.  பகுத்தறிவா ளர் கழக மாவட்ட செயலாளர் அறிவுச்செல்வம் நிகழ்ச்சியி னை தொகுத்து வழங்கினார். பகுத்தறிவு ஆசிரியர் அணி ஆத்தூர் மாவட்ட துணைத் தலைவர் வினோத் குமார், மாவட்ட அமைப்பாளர் பெரிய சாமி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் முருகானந் தம், மாவட்ட அமைப்பாளர் மருத.பழனிவேல், திராவிடர் கழக மாவட்ட தலைவர் வான வில், மாவட்ட காப்பாளர் விடுதலை சந்திரன், மாவட்ட செயலாளர் சேகர், மதிமுக மாவட்ட செயலாளர் கோபால் ராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

தருமபுரி மண்டல பகுத் தறிவு ஆசிரியர் அணி அமைப் பாளர் கிருஷ்ணமூர்த்தி, சேலம் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி செயலாளர் முனுசாமி, மேட்டூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட. தலைவர் வேல்முரு கன், பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர் சீத்தாபதி, சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வீரமணி ராஜி, மேட்டூர் மாவட்ட பகுத் தறிவாளர் கழக மாவட்ட தலைவர் கோவி. அன்புமதி, மாவட்ட செயலாளர் மதியழ கன், திராவிடர் கழக அமைப் பாளர் ஆத்தூர் சுரேஷ்,  நகர தலைவர் அண்ணாதுரை, விஜய் ஆனந்த், நரசிங்கபுரம் கழக தலைவர் வெ.மணி, செய லாளர் நல்ல சிவம், ஒன்றிய அமைப்பாளர் செல்வம், இளைஞர் அணி கார்முகிலன், மோகன், ஆகியோர் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்.

கல்வி புரட்சியாளர்கள் படங்கள் திறப்பு..!

நிகழ்ச்சியில் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் ஒடுக்கப் பட்ட மற்றும் பிற்படுத்தப் பட்ட மக்களின் கல்விக்காக உழைத்த தலைவர்களின் படங் களை ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் திராவிடர் கழக பொறுப்பாளர்கள் திறந் தனர். உலகப் பொதுமறையாம் திருக்குறளை தந்த திருவள்ளு வர் படத்தினை தலைமை ஆசிரியர் செல்வமும், மகாத்மா ஜோதிராவ் பூலே அவர்களின் படத்தை முனைவர் முருகேச னும், சாவித்திரி பாய் பூலே படத்தை பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட தலைவர் பழனிவேலும், தந்தை பெரியார் படத்தை திமுக மாவட்ட பிரதி நிதி ஸ்டாலினும், அம்பேத்கர் படத்தினை தமிழ்நாடு பட்ட தாரி ஆசிரியர் சங்கம் மாநில துணைத்தலைவர் மாயகிருஷ் ணனும், காமராசர் படத்தினை தலைமை ஆசிரியர் கண்ண னும், அறிஞர் அண்ணா அவர் களின் படத்தினை முருகனும், கலைஞர் அவர்களின் படத் தினை கழக மாவட்ட தலைவர் வானவில்லும்  திறந்து வைத்தனர்.

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் அண்ணா. சரவணன் கலைஞர் 100 ஆண்டு விழாவினை முன்னிட்டு கலைஞர் அவர்கள் மாணவர்க ளுக்கும் ஆசிரியர் சமூகத்திற்கும் ஆற்றிய தொண் டுகள் பற்றிய நீண்டதொரு வர லாற்று உரையை நிகழ்த்தினார். பகுத் தறிவு ஆசிரியர் அணி மாநில தலைவர் தமிழ் பிரபாகரன் பகுத்தறிவு ஆசிரியர் அணி தோற்றம் அதன் செயல்பாடு கள் குறித்து விளக்கினார்.

அதனைத் தொடர்ந்து கழக சொற்பொழிவாளர் இராம. அன்பழகன் நிகழ்ச்சியில் திறக் கப்பட்ட கல்வி புரட்சியாளர் களின் வாழ்வில் நடந்த நிகழ்வு களை தொகுத்தும் மனிதர்களா கிய நாம் எந்தெந்த செயல்களில் பகுத்தறிவு இன்றி நடக்கின் றோம் என்று தனக்கே உரிய நகைச்சுவை பேச்சின் மூலம் விளக்கினார். குறிப்பாக, ஆசிரி யர்கள் பகுத்தறிவோடு நடந்து கொண்டால் தான் எதிர்கால மாணவ சமுதாயத்தை அறி வாளிகளாக படைக்க முடியும். ஆகையால் ஆசிரியர்கள் நாம் பகுத்தறிவு சுடர் ஏந்துவோம் என்றார். ஆத்தூர் நகரில் பெரியார் கொள்கையை பின் பற்றி வாழும் அய்யா தங்கவேல் அவர்கள் 102 வயதிலும் ஆரோக்கியமாக வாழ்கின்றார் என்றால் கடவுள் என்ற ஒன்றே மனித வாழ்க்கைக்கு தேவையற் றது என்று  தன் உரையின் மூலம் விளக்கினார்.

புதிய ஆசிரியர்களின் கருத்துகள்!

பகுத்தறிவு ஆசிரியர் அணி நிகழ்ச்சிக்கு  பல்வேறு பகுதி களில் இருந்து புதிய ஆசிரியர் கள் பலர் பகுத்தறிவு சிந்த னைக் கூட்டம் காண வந்திருந்த னர். அவர்கள் இது போன்ற பகுத்தறிந்து சிந்திக்கும் பேச் சுகளை இன்று தான் முதன் முதலாக வாழ்நாளில் கேட்கின் றோம் என்று மகிழ்ந்து கூறினர். தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகளை ஆத்தூரை சுற்றி உள்ள தங்கள் பகுதிகளிலும் நடத்த விரும்புகின்றோம் என் றும் கூறி மகிழ்ந்தனர்.

பெரியார் சிந்தனைகளை தன் வாழ்நாள் நெறியாக கொண்டு வாழும் வரலாறாக விளங்கும் பெரியார் பெருந் தொண்டர் ஆத்தூர் தங்கவேல் அவர்க ளின் 102ஆவது பிறந்த நாள் விழா மக்கள் மன்றத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஆத்தூர் மாவட்ட பகுத் தறிவு ஆசிரியர் அணி மாவட்ட துணை தலைவர் வினோத் குமார் நன்றியுரை ஆற்றினார்.

நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் கமலம்,  சேலம் மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்  இமயவரம்பன், சுந்தரவதனம், ராகினி மற்றும் ஆத்தூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி உறுப்பினர்கள் மனோகரன், சத்யன், வரதராஜ்,முரளி, லக்ஷ்மணன், புதிய ஆசிரியர்கள்  TAMS ஜோசப் ராஜ், சுந்தரேசன், கிருபாகரன், பிரபு, விஜயகுமார்,சுதாகர், சத்யராஜ் மற்றும் மாற்று கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் விழாவினை கண்டு மகிழ்ந்தனர்.

No comments:

Post a Comment