நிலக்கரி இறக்குமதியில் மெகா ஊழல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 14, 2023

நிலக்கரி இறக்குமதியில் மெகா ஊழல்!

இந்தியாவில் மின் கட்டணம் உயர அதானி நிறுவனமே காரணம்!

இங்கிலாந்தில் வெளியாகும் ‘பைனான்சியல் டைம்ஸ்’ ஏட்டில் அம்பலம்

சென்னை, அக்.14   நிலக்கரி இறக்குமதியில் அதானி நிறுவனம் செய்த மெகா ஊழலே, இந்தியாவில் மின் கட்டணம் உயர கார ணம் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இங்கிலாந்தின் 'பைனான்சியல் டைம்ஸ் ' வெளியிட்ட ஆய்வு கட்டுரை யில், இந்தோனேசியாவில் இருந்து குறைந்த விலைக்கு நிலக்கரி வாங்கும் அதானி நிறுவனம், அதனை தனது குஜ ராத்தின் முந்த்ரா துறைமுகத்திற்கு கொண்டு வந்ததும், 52 சதவிகித லாபத் திற்கு விற்றதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.

2019 ஜனவரியில் இந்தோனேசியாவில் 74 ஆயிரத்து 820 டன் நிலக்கரியை, 16 கோடி ரூபாய்க்கு வாங்கிய அதானி நிறுவனம், இந்தியா கொண்டு வந்ததும், 2 மடங்கு உயர்த்தி, 35 கோடி ரூபாயாக விலை அதிகரித்து அரசுக்கு விற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் பார்த்ததாக குற்றம் சாட்டப்பட் டுள்ளது.

நிலக்கரி இறக்குமதியில் அதானி நிறு வனம் செய்த இத்தகைய மோசடிகளால் இந்தியாவில் மின் கட்டணம் உயர வழிவகுத்துள்ளதாகவும் இதன் பாதிப்பு நாட்டின் ஒவ்வொரு சாமானிய மக்களின் தலையிலும் விழுந் துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட் டுள்ளது. அதானி நிலக்கரி ஊழல் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், ஒன்றிய பா.ஜ.க. அரசின் அழுத்தத்தால் இந்த விசார ணையை புலனாய்வு அமைப்புகள் மூடி மறைத்ததாக பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் குற்றச்சாட்டு! 

நிலக்கரி இறக்குமதியில் அதானி நிறுவனம் மோசடி செய்ததாக ஃபைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட கட்டுரையை சுட்டிக் காட்டி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதானி நிறுவனங்களின் மோசடி களை மூடிமறைக்க ஒன்றிய அரசு என்னதான் முயன்றாலும், மோடியின் பணக்கார நண்பரின் ஊழல்கள் ஒவ் வொரு நாளும் அம்பலப்பட்டு வருவதை தடுக்க முடியாது என்று கூறியுள்ளார். குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை, 52 சதவிகிதம் விலை உயர்த்தி, அதானி நிறுவனம் விற்பனை செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அவர், இதன் மூலம் 2ஆண்டுகளில் 12 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை லாபம் பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த மெகா ஊழலில் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள் யார்? என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.


No comments:

Post a Comment