காவிரி விவகாரம்: சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தனித் தீர்மானம் நிறைவேறியது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 9, 2023

காவிரி விவகாரம்: சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தனித் தீர்மானம் நிறைவேறியது!

சென்னை,அக்.9- காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப் பேரவை யில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செயற்கையான நெருக்கடியை கருநாடக அரசு உருவாக்கி வருகிறது என்று கூறினார்.

சட்டப் பேரவையில் இன்று (9.10.2023) தனித் தீர்மானத்தை முன் மொழிந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு இதுவரை 9.19  டிஎம்சி தண்ணீர் வர வேண்டிய நிலையில் இது வரை 2.18 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு கருநாடக அரசு முறையாக தண்ணீர் திறக்கவில்லை. காவிரி ஆற்றில் செயற்கையான நெருக் கடியை கருநாடகம் உருவாக்கி வருகிறது என்றும் காவிரியில் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை களை குறிப்பிட்டும் ஸ்டாலின் பேசினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க் கட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டிற்காக போராடி வருகிறோம். சம்பா பயிர்களை காப்பாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.

காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட ஜூலை 17ஆம் தேதி முதல் ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் செயற்கையான நெருக்கடிய கருநாடக அரசு உருவாக்கி வருகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ் நாட்டிற்கான காவிரி நீரை கருநாடகம் திறந்து விட வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாத வாரியாக தமிழ் நாட் டிற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தினோம் என்றார். காவிரி விவகாரம் தொடர்பான தீர்மானம் சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

No comments:

Post a Comment