அரியலூர் வருவாய் மாவட்ட அளவில் மாணவிகளுக் கான இறகுப் பந்து போட்டி 10.10.2023 அன்று மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.அதில் பெரியார் பள்ளி மாணவிகள் 17 வயதிற்குட்பட்ட ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளில் கலந்து கொண்டனர். அதில் பூஜாசிறீ ஒற்றையர் போட்டியில் முதலிடம் பிடித்தார். இரட்டையர் பிரிவில் பூஜாசிறீ மற்றும் அய்ஸ்வர்யா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். இருவரும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். போட்டியில் வென்ற வீராங்கனைகள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ், ரவிசங்கர் மற்றும் ரஞ்சனி ஆகி யோரை பள்ளி தாளாளர், முதல்வர் ,இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் வாழ்த்தினர்.
Tuesday, October 17, 2023
பெரியார் மெட்ரிக் பள்ளி மாணவிகள் இறகுப் பந்து போட்டியில் முதலிடம்!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment