குலத் தொழிலை ஊக்குவிக்கும் "விஸ்வகர்மா யோஜனா"
ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்த்து தமிழர் தலைவரின் பரப்புரைப் பயணம்
வரவேற்புப் பொதுக்கூட்டங்களில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்கிறார்கள்
நாளை (அக்.25இல்) தொடங்குகிறது
நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகில், அவுரித் திடலில் பரப்புரைப் பயணத்தின் தொடக்க விழா 25.10.2023 புதன்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. தமிழர் தலைவர் மேற்கொள்ளும் பரப்புரைப்பயணத்தின் தொடக்க விழாவில் திமுக, காங்கிரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடு தலைச் சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள், அமைப்பு களின் பொறுப்பாளர்கள் பங் கேற்று சிறப்பிக்க உள்ளனர்.
நாகை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் முன்னிலை யில் மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் தலை மையில், மாவட்டச் செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா வரவேற்க, கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தொடக்க உரையாற்றுகிறார்.
தொடக்க விழாப் பொதுக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலா ளர் தோழர் இரா.முத்தரசன், திமுக மாவட்டச் செயலாளரும், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக்கழகத் தலைவருமாகிய என்.கவுதமன், தாட்கோ தலைவரும், திமுக விவசாய தொழிலாளர் அணி மாநில செயலாளருமாகிய உ.மதிவாணன், கம்யூனிஸ்ட கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராசு, சிபிஎம் மாநி லக்குழு உறுப்பினர் - சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ் மற்றும் அனைத்துக் கட்சிகளின் பொறுப்பாளர்கள் உரை ஆற்றுகின்றனர்.
விழா நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்.
நாகை ஒன்றிய கழக செய லாளர் எம்.கே.கு.சின்னதுரை நன்றி கூறுகிறார்.
நாகையில் 25.10.2023அன்று தொடங்கும் பரப்புரைப் பயணம்
பரப்புரைப் பயணத்தின் முதல் கட்ட சுற்றுப்பயணம் 25.10.2023இல் நாகையில் தொடங்கி 28.10.2023இல் சேலத் தில் நிறைவடைகிறது. 25.10.2023 அன்று மாலை 5 மணிக்கு பரப்பு ரைப் பயணம் நாகையில் தொடங் குகிறது. 25.10.2023 அன்றிரவு செம்பனார்கோயிலில் பொதுக் கூட்டம், அடுத்த நாள் 26.10.2023 மாலை விழுப்புரத்திலும், இரவு புதுச்சேரியிலும், 27.10.2023 மாலை வாலாஜாப்பேட்டையி லும், இரவு வேலூரிலும், 28.10.2023 மாலை 5 மணிக்கு அரூரிலும், இரவு சேலத்திலும் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.
பரப்புரைப் பயணத்தின் இரண்டாம் கட்ட சுற்றுப்பய ணம் நம்பியூரில் 31.10.2023 அன்று தொடங்கி மதுரையில் 5.11.2023இல் நிறைவடைகிறது. இரண்டாம் கட்ட பயணம் 31.10.2023 அன்று மாலை 5 மணிக்கு நம்பியூரிலும், இரவு திருப்பூரிலும், 1.11.2023 மாலை 5 மணிக்கு தாராபுரத்திலும், இரவு பழனியிலும், 2.11.2023 அன்று மாலை திருநெல்வேலியிலும், இரவு தூத்துக்குடியிலும், 5.11.2023 அன்று மாலை 5 மணிக்கு திரு புவனத்திலும், இரவு இரண்டாம் கட்ட பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழாப் பொதுக்கூட்டம் மதுரையிலும் நடைபெறுகிறது.
தமிழர் தலைவர் பரப்புரைப் பயணத்தில் சமூக நீதியில் அக் கறை கொண்டுள்ள அனைத்துக் கட்சிகள், அமைப்புகளின் பொறுப் பாளர்கள், அமைச்சர்கள், நாடா ளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்று சிறப்புரை ஆற்றுகின்றனர்.
கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழக ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் கழகப்பொறுப்பாளர்களை பரப்புரைப்பயண ஏற்பாடுகளில் ஒருங்கிணைத்து வருகின்றனர்.
பரப்புரைப்பயணத்தில் பொதுக்கூட்டங்களில் சொற்பொழிவாளர்களாக முதல் கட்டப்பயணத்தில் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், இரண்டாம் கட்டப் பயணத்தில் முனைவர் அதிரடி க.அன்பழகன் பங் கேற்று பயண நோக்கம் குறித்து விரிவுரை ஆற்றுகின்றனர்.
No comments:
Post a Comment