விழாக்கோலத்தில் தஞ்சை மாநகரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 5, 2023

விழாக்கோலத்தில் தஞ்சை மாநகரம்

 திராவிடர் கழகத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா
'சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு விழா

சென்னை,அக்.5 -  முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா, சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு விழா தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் சார்பில் தஞ்சை மாநகரில் எழுச்சியுடன் 6.10.2023 மாலை நடைபெறுகிறது. 

தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வரவேற்பு தோரணங்கள், கழகக்கொடிகள் அமைக் கப்பட்டு உற்சாக மிகுதியில் தஞ்சை மாநகரம் திகழ்கிறது. திராவிடர் கழகம், திமுக உள்ளிட்ட சமூகநீதியில் அக்கறை கொண் டுள்ளவர்கள் தங் களின் குடும்ப விழாவாக கருதி விழாவுக்கு திரள் கின்றனர். விழாவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தோழர்கள், பொறுப்பாளர்கள் பெருந்திரளாக திரள்கின்றனர்.

முத்தமிழ் அறிஞர்  கலைஞர் நூற்றாண்டு விழா, 'சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு விழா திராவிடர் கழகத்தின் சார்பில் 6.10.2023 அன்று மாலை 5:00 முதல் 8:30 வரை தஞ்சாவூர் புதிய பேருந்து நிலை யம் அருகில், மாநகராட்சி மாநாட்டு அரங்கத்தில் தஞ்சை எஸ்.என்.எம். உபயதுல்லா நினைவரங்கம் - இராஜகிரி கோ. தங்கராசு நினைவு மேடையில் நடைபெறுகிறது. கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற்றுகிறார்.

கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசே கரன், வீ.அன்புராஜ்,  பொருளாளர் வீ.குமரேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன் ஆகி யோர் முன்னிலை வகிக்கின்றனர்.

நூல் வெளியீடு

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொகுத்த 'தாய் வீட்டில் கலைஞர்’ நூலை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட, முதல் படியை  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெற்றுக் கொள்கிறார். தஞ்சை மத்திய தி.மு.க. மாவட்டச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சை மாநகர தி.மு.க.செயலாளர், மேயர் சண்.இராமநாதன், தி.மு.க. மருத்துவரணி மாநில துணைச் செயலாளர் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி ஆகியோர் நூலைப் பெற்றுக்கொள்கின்றனர்.

சான்றோர்கள் பாராட்டுரை

சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி, மேற்கு வங்க மாநில மேனாள் தலைமைச் செயலாளர்  ஜி.பாலச்சந்திரன் அய்.ஏ.எஸ்., தவத்திரு பாலபிரஜாபதி அடிகளார் ஆகியோர் பாராட்டுரை ஆற்றுகின்றனர்.

தமிழர் தலைவர் தலைமையுரை

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விழாத் தலைமை யேற்று சிறப்புரை, பாராட்டுரை ஆற்றுகிறார்.

முதலமைச்சர் ஏற்புரை

'சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவுரை - ஏற்புரை ஆற்றுகிறார்.

தஞ்சாவூர் மாவட்ட கழகத் தலைவர் வழக் குரைஞர் சி.அமர்சிங் நன்றியுரை கூறுகிறார்.

கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்குகிறார்.

பங்கேற்போர்

விழாவில், தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் எல்.கணேசன், தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நாடாளுமன்ற உறுப் பினர் எஸ்.கல்யாணசுந்தரம்,  தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் செ.இராமலிங்கம், அரசு தலைமைக் கொறடா சட்டமன்ற உறுப்பினர் முனைவர் கோவி.செழியன், தி.மு.க.தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார்,  து.செல்வம், சட்டமன்ற மேனாள் உறுப்பினர் எம்.இராமச்சந்திரன், சட்டமன்ற உறுப் பினர் க.அன்பழகன்,  சட்டமன்ற மேனாள் உறுப் பினர் கே.டி.மகேஷ் கிருஷ்ணசாமி, தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் ச.இறைவன், தஞ்சை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், தி.மு.க. உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சை ஒன்றியக் குழுத் தலைவர், தி.மு.க. வைஜெயந்தி மாலா கேசவன்  உள்பட திமுக பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

வரவேற்பாளர்கள்

விழாவில் திராவிடர் கழகப்பொறுப்பாளர்கள் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள் மொழி, வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, துணைப் பொதுச் செயலாளர்கள் பொறியாளர் ச. இன்பக்கனி, வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, வழக்குரைஞரணி தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், தொழிலாளரணி மாநிலச் செயலாளர் மு.சேகர், மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப் பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், திராவிடர் விவசாயத் தொழிலாளர் அணி மாநிலச் செயலாளர் குடவாசல் க.வீரையன், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக் குரைஞர் பா.மணியம்மை, கழகக் காப்பாளர்கள் வெ.ஜெயராமன், மு.அய்யனார்,  தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி, தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருண கிரி, மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் பெ.வீரையன்,  கும்பகோணம் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, பட்டுக்கோட்டை மாவட் டச் செயலாளர் வை.சிதம்பரம், கும்ப கோணம் மாவட்டச் செயலாளர் சு.துரைராஜ், மன்னார்குடி மாவட்டச் செயலாளர் கோ.கணேசன்,  தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், தஞ்சை மாநகரச் செயலாளர் அ.டேவிட் வரவேற்பாளர்களாக களப் பணி ஆற்றுகின்றனர்.

மாலையில் கலைநிகழ்ச்சி

மாலை 5.00 மணிக்கு தெற்குநத்தம் சித்தார்த்தன் - உறந்தை கருங்குயில் கணேசன் - திருத்தணி பன்னீர்செல்வம் இணைந்து வழங்கும் ‘திராவிடமே வெல்லும்!’ பெரியார் கல்வி நிறுவனங்கள் வழங்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

 திராவிடர் கழக தலைமை நிலையம் விழாவை ஒருங்கிணைத்துள்ளது.


No comments:

Post a Comment