பட்டாசு ஆலை விபத்து வருவாய்த் துறை அமைச்சர் விளக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 11, 2023

பட்டாசு ஆலை விபத்து வருவாய்த் துறை அமைச்சர் விளக்கம்

சென்னை, அக். 11-  ஓசூர், அரிய லூர் பகுதிகளில் நடந்தபட்டாசு விபத்துகள் தொடர்பாக சட்டப் பேரவையில்  கவனஈர்ப்பு தீர்மா னம் கொண்டு வரப்பட்டது. அதன்மீது நடந்த விவாதம்:

எதிர்க்கட்சி தலைவர் பழனி சாமி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருநாடக எல்லையில் உள்ள அத் திப்பள்ளியில் கடந்த 7-ஆம் தேதி நடந்த பட்டாசு விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 

அரியலூர்மாவட்டம் திருமா னூர் அருகே கடந்த 9ஆ-ம் தேதி நடந்த பட்டாசு விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற விபத்துகள் இனியும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

செல்வப்பெருந்தகை (காங்கி ரஸ்): இப்போது மட்டுமல்ல. 2011-2021 காலகட்டத்திலும் இதுபோல பல பட்டாசு விபத்துகள் நடந் துள்ளன.

மேனாள் முதலமைச்சர் ஓ.பன் னீர்செல்வம்: விருதுநகர், தூத்துக் குடி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை மாவட்டங்களை தொடர்ந்து தற் போது ஒசூர்,அரியலூரில் விபத்து நடந்துள்ளது. இதற்கு பாதுகாப்பு குறைபாடுகளே காரணம்.

அருள் (பாமக): கடந்த ஒரு மாதத்தில் 3 இடங்களில் விபத்து கள் நடந்து, பலர் உயிரிழந்துள்ள னர்.இதற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் போதாது. ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

இதற்கு பதில் அளித்து, அமைச் சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசிய தாவது: 

பெரும்பாலும் உரிய பயிற்சி பெறாதவர்களே பட்டாசு தயாரிப் பில் ஈடுபடுகின்றனர். அரியலூர் பட்டாசு ஆலையில் ஆய்வு செய்த தில், 7 பேர் மட்டுமே விருதுநகரை சேர்ந்தவர்கள். பயிற்சி பெற்ற இவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பயிற்சி அளித்து பட்டாசு தயாரித் துள்ளனர். ஒரே நாள் ரெய்டு நடத்தி இதுபோன்ற ஆலைகளை மூடிவிடலாம். ஆனால், அதில் பணியாற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே தான், பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது. தொழிலாளர் நலத் துறை அமைச்சருடன் பேசி, தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

கடந்த அதிமுகஆட்சியில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்பட் டது. தற்போது தலா ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது. மேலும், தமிழ் நாட்டில் இதுபோன்ற விபத்துகள் வருங்காலத்தில் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக் கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment