பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக பணித்தோழர்கள் கூட்டமைப்பில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 2, 2023

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக பணித்தோழர்கள் கூட்டமைப்பில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள்

திருச்சி, அக். 2- பெரியார் நூற் றாண்டு கல்வி வளாக பணித் தோழர்கள் கூட்டமைப்பில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாள் சமூகநீதி நாளாக 29.09.2023 அன்று மாலை 5.30 மணிக்கு பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி அரங்கத்தில் நடைபெற் றது. 

பெரியார் மருந்தியல் கல் லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமை யில் பெரியார் துவக்கப்பள்ளி யின் தலைமையாசிரியர்  விஜய லெட்சுமி, பணித்தோழர்கள் கூட்டமைப்பின் தலைவர் முனைவர் கோ. கிருஷ்ண மூர்த்தி, பொறுப்பாளர்கள் கவுதமன், செல்வி ஆகியோர் முன்னிலையில் பேராசிரியர் க.அ.ச. முகமது சபீஃக் வரவேற் புரையாற்றினார்.  

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் “மண் டைச் சுரப்பை உலகு தொழும்” என்னும் தலைப்பில் சிறப்புரை யாற்றினார். அவர் தமது உரை யில் பாவேந்தரின் சிந்தனையில் உதித்த தந்தை பெரியார் பற் றிய கவிதை வரிகள் “தொண்டு செய்து பழுத்த பழம்” என்னும் முதல் வரியில் துவங்கி  ஒவ் வொரு வரிகள் குறித்தும் ஒரு நாள் முழுவதும் பேசினாலும் தந்தை பெரியார் அவர்களின் சமுதாயப்பணிகளை சொல்லி விட முடியாது என்றும் பெருங்கடலில் ஒரு சிறு துளி போல் "மண்டைச் சுரப்பை உலகு தொழும்" என்னும் தலைப்பில் பணித்தோழர்கள் மத்தியில் பேசுவதில் மகிழ்ச்சி யடைவதாகவும் கூறினார்.

மேலும் பணித்தோழர்கள் என்ற வார்த்தைகளை மற்ற கல்வி நிறுவனங்களில் பார்க்க முடியாது என்றும் தோழர் என்ற வார்த்தையை அறிமுகம் செய்த பெருமை தந்தை பெரியார் அவர்களையே சாரும் என்றும் குறிப்பிட்டார். திருச்சியில் 1970, செப்டம்பர் மாதம் 30ஆம் நாள் தந்தை பெரியார் அவர்கள் உரை நிகழ்த்தும் போது, பெரியார் கல்வி நிறுவனங்களில் மற்ற கல்வி நிறுவனங்களைப் போன்று அவரவர் கொள்கைகளை புகுத்துவது கிடையாது. மாண வர்களை அடிக்கடி நான் சந் திப்பதும் கிடையாது. ஆனால்  பெரியார் கல்வி நிறுவனங்கள் நாளுக்குநாள் வளர்ந்து வருகின்றன என்று அன்றே பெரியார் கல்வி நிறுவனங்க ளின் வளர்ச்சியை குறிப்பிட் டார். அதே போன்று தற்போ தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடை பெறும் இக்கல்வி நிறுவனங்கள் பணித்தோழர்களின் ஒத்து ழைப்பால் சிறப்பாக நடை பெறுவதை எங்களைப் போன் றோர்களால் அறிய முடிகின் றது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 

"மானமும் அறிவும் மனித னுக்கு அழகு" என்று குறிப் பிட்ட தற்தை பெரியார் அவர் கள் அத்தகைய மானத்தையும் அறிவையும் நம் தமிழின மக்கள் பெறுவதற்காக தம்மு டைய இறுதி மூச்சுவரை பாடு பட்டார். சாக்ரடீஸ், சார்லஸ் பிராட்லா, கார்ல்மார்க்ஸ் போன்ற தத்துவ மேதைகளின் முற்போக்கு சிந்தனைகளையும் கடந்தது பெரியார் அவர்களின் மனிதநேய சிந்தனை என்றும் அவர்களுக்கு இருந்தது ஜாதிப் பற்றோ, மொழிப்பற்றோ, இனப்பற்றோ அல்ல, மனிதப் பற்று. ஆதனால் தான் பெரியா ராக இன்றும் உயர்ந்து நிற்கி றார்.   பெண்களுக்காக கர்ப்பத் தடை வரை சிந்தித்த  ஒரு புரட்சியாளரை பார்ப்பது அரிது. இன்றைக்கு புதுப்புது வடிவில் அடக்குமுறைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றை களைவதற்கு தந்தை பெரியார் அவர்களின் மண்டைச் சுரப்பை தொழ வேண்டும், பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டு பெரியார் உலகமயமாகிறார் என்பது கடந்து உலகம் பெரியார் மயமாகிக் கொண்டிருக்கின்றது என்பதனை பெருமையுடன் கூறி நிறைவு செய்தார்.  

செப்டம்பர் மாதத்தில் பிறந்தநாள் கொண்டாடும் பணித்தோழர்களுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண் டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர் இரா. தமிழ்ச்செல்வ னின் பிறந்தநாள் செப்டம்பர் 16 என்பதால் அவரும் பணித் தோழர்களுடன் இணைந்து கேக் வெட்டி தமது பிறந்தநா ளினை கொண்டாடி மகிழ்ந் தார். முன்னதாக அனைவரும் சமூகநீதி நாள் உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணித் தோழர்கள் பங்கேற்று சிறப்பித் தனர். நிறைவாக பெரியார் மருந்தியல் கல்லூரியின் உதவி நூலகர் அ. சமீம் நன்றியுரை யாற்ற விழா இனிதே நிறைவுற் றது. 

தந்தை பெரியார் அவர் களின் பிறந்தநாளினை முன் னிட்டு அனைவருக்கும் இனிப் புகள் வழங்கப்பட்டு சிறப்பாக பிறந்தநாள் கொண்டாடப்பட் டது.

No comments:

Post a Comment