கொந்தகையில் மண் கலயங்கள் கண்டெடுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 8, 2023

கொந்தகையில் மண் கலயங்கள் கண்டெடுப்பு

கொந்தகை,அக்.8 - கொந்தகையில் தண்ணீர்க் குழாய் பதிக்க தோண் டப்பட்ட குழியிலிருந்து பழைமை யான கலயங்கள், மனித எலும்புகள் கண்டறியப்பட்டன.

சிவகங்கை மாவட்டம், திருப்பு வனம் அருகே உள்ள கீழடியில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கப்பட்ட 9-ஆம் கட்ட அகழாய்வு கடந்த மாதம் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, அருகே உள்ள கொந்த கையிலும் அகழாய்வு நடத்தப்பட்டது.

அகழாய்வில் முதுமக்கள் தாழி கள், மனித எலும்புகள் உள்பட பண்டைய தமிழர்கள் பயன்படுத் திய ஏராளமான தொன்மையான பொருள்கள் கண்டறியப்பட்டன. இந்த அகழாய்வில் கண்டறியப்பட் டப் பொருள்களை ஆவணப்படுத் தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், கொந்தகையைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது தோட்டத்தின் அருகே தண்ணீர்க் குழாய் பதிக்க குழி தோண்டினார். அப்போது, குழியிலிருந்து பல வடி வங்களில் ஏராளமான மண் கலயங்கள், மனித எலும்புகள் கண்டறியப் பட்டன. இதுகுறித்து கீழடியில் உள்ள தொல்லியல் துறையினருக்கு சுரேஷ் தகவல் தெரிவித்தார். அவர் கள் நேரடியாக வந்து இந்த மண் கலயங்களை வாங்கிச் செல்வதாகக் கூறியதாக சுரேஷ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment