விண்வெளி வீரர்களுடன் பயணிக்க தயாராகும் ககன்யான் விண்கலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 9, 2023

விண்வெளி வீரர்களுடன் பயணிக்க தயாராகும் ககன்யான் விண்கலம்

சென்னை, அக்.9- மனித விண்வெளிப் பயணத்தை மேற்கொள்வதற்காகத் தயா ரிக்கப்படும் ககன்யான் விண் கலத்திற்கு தேவையான அதி நவீன, உயர் தொழில் நுட்பம் கொண்ட இன்டகிரேடட் ஏர் ட்ராப் டெஸ்ட் -க்ரூ மாடல் என்னும் கட்டமைப்பை சென்னையைச் சேர்ந்த கே.சி.பி. நிறுவனத்தின் கனரக பொறியில் பிரிவு அதிகாரிகள் இஸ்ரோவின் மனித விண்வெளி விமான மய்யத்தின் செயல் இயக்குநர் ஆர்.ஹட்டனிடம் 7.10.2023 அன்று ஒப்படைத்தனர்.

இதுகுறித்து முன்னதாக கே.சி.பி. குழுமத்தின் நிர்வாக இயக்குநர் இந்திரா தத் கூறியிருப்பதாகவது;- 

இஸ்ரோ தற்போது மனித விண் வெளிப் பயண முயற்சியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. இந்த ககன்யான விண்வெளி வடிவமைப்பில், ஒரு முக்கிய அங்கம் இன்டர்கிரேடட் ஏர் ட்ராம் டெஸ்ட்யில் க்ரூ மாடல் அதாவது விண் வெளி வீரர்களுடன் கூடிய விண்கலம் பூமிக்கு திரும்பும்போது புவியீர்ப்பு விசையால் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் கடலில் விழுந்து மிதக்கும்.

இந்த சாதனத்தின் உள்கட்மைப்பை உருவாக்கும் பணியை  கே.சி.பி. நிறுவனத்திற்கு இஸ்ரோ அளித் துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற மிக சவாலான பணி, கே.சி,.பி. கனரக பொறியியல் பிரிவின் உள்கட்டமைப்பு மற்றும் திறமை யான பணியாட்கள் மூலமே சாத்தியமாகி உள்ளது.

இனிவரும் காலங்களில், இந்நிறுவன நிர்வாகம் தனது தொழிற்சாலையில் உதிரிப்பாக உற்பத்தியில் தொடங்கி ஒட்டு மொத்த ஒருங்கிணைப்பு வரை அனைத் தையும் மேற்கொள்வதற்காக வசதியாக உள்கட்டமைப்பினை விரிவாக்கத் திட்ட மிட்டுள்ளது என இந்நிறுவன இணை நிர்வாக இயக்குநர் கவிதா தத் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment