சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வுக்கு இலவச பயிற்சி - ஆதிதிராவிடர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 16, 2023

சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வுக்கு இலவச பயிற்சி - ஆதிதிராவிடர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி,அக்.16- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப் பினருக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி களை தாட்கோ வழங்கி வருகிறது. அதன் அடிப் படையில் சட்ட பல்கலைக்கழகங்களில் சட்டப்படிப்பு படிப்பதற்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியை இலவசமாக வழங்க உள்ளது.

இப்பயிற்சியை பெற 18 முதல் 25 வயது நிரம்பிய பிளஸ்-2 முடித்த மாணவர்கள் மற்றும் நடப்பாண்டில் பிளஸ்-2 பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமம் இருக்க வேண்டும். மேலும் இத்தேர்விற்கு விண்ணப் பிக்கும் முறை இணையதளம் வழியாகவும், தேர்வு நடைபெறும் முறை நேரடியாகவும் நடைபெறும். 

இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாண வர்களுக்கும் சட்டப்படிப்பு படிப்பதற்கு ஏனைய நுழைவுத் தேர்வுகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்படும். பொது நுழைவுத் தேர்வுக்கான சட்டப்படிப்பு நுழைவு தேர்விற்கான பயிற்சி வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அடுத்த சுட்ட தேர்வுகளான நேர்காணல், குழுவிவாதம், எழுத்துத் தேர்வு ஆகியவற்றிற்கும் பயிற்சிகள் வழங்கப் படும்.

எனவே இத்தேர்விற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெற www.tahdeo.com  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment