உத்தரப்பிரதேசம், குஜராத்தைத்தவிர வேறு எங்கும் பா.ஜ.க. வெற்றி பெறமுடியாது புதுச்சேரி மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 3, 2023

உத்தரப்பிரதேசம், குஜராத்தைத்தவிர வேறு எங்கும் பா.ஜ.க. வெற்றி பெறமுடியாது புதுச்சேரி மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி, அக். 3 -  இரண்டு மாநிலங்களைத் தவிர வேறு எங்கும் பாஜகவால் வெற்றி பெற முடியாது என்று புதுச் சேரி மேனாள் முதல மைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் சார்பில் காந்தியார், லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாள், காமராஜர் நினைவுநாள் முப்பெரும் நிகழ்வாக பாரதிதாசன் கல்லூரி எதிரே நடந்தது.

அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேச தலைவர்களின் உருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப் பட்டது.

வைத்திலிங்கம் எம்.பி.

மாநில காங்கிரஸ் தலைவர் எம்பி வைத்திலிங்கம் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசினார். 

அவர், "காந்தி நமக்கு பெற்றுத்தந்த சுதந்திரம் மோடி ஆட்சியில் காணாமல் போய் விட் டது. புதிய கல்விக் கொள் கையில் மொழியை திணிக்கின்றனர்.

ஹிந்தி படிக்கும்படி கூறுகின்றனர். மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும். 

ராகுல் காந்தி பிரத மராக வேண்டும். அப் போது தான் சுதந்திர மான இந்தியா செயல் படும்.

அனைவரும் இதற் காக நாராளுமன்ற தேர் தலில் ஒருங்கிணைந்து உழைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி

மேனாள் முதல மைச்சர் நாராயணசாமி பேசுகையில், "மோடி ஆட்சியில் பொருளா தாரம் வீழ்ச்சியடைந் துள்ளது.

தேவையற்ற, அவசிய மற்ற திட்டங்களுக்கு ஒன்றிய பாஜக அரசு செலவு செய்கிறது. 

பணத்தை சுய விளம் பரத்துக்காக மோடி செலவு செய்து ஆட்சி செய்கிறார்.

தற்போதைய அரசி யல் சூழலில் உத்திரப் பிரதேசம், குஜராத் தவிர வேறு எந்த மாநிலங்க ளிலும் பாஜகவால் வெற்றி பெற முடியாது. 

தொகுதிகளை விட்டுக் கொடுத்து "இண்டியா" கூட்டணி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளோம்.

யார் வேண்டுமானா லும் பிரதமராக இருக்க லாம். காங்கிரஸ் கட்சி தான் முதன்மையான கட்சியாக இருக்கும்.  மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

புதுச்சேரியில் ஊழல் மலிந்த ஆட்சி நடந்து வருகிறது. நாற்காலியை கெட்டியாக பிடித்துக் கொண்டு பொம்மை முதலமைச்சராக ரங்க சாமி செயல்படுகிறார். 

முதலமைச்சர் இல் லாமல் விழாக்களுக்கு ஆளுநர்தான் வருகிறார். யார் முதலமைச்சர் என தெரியாத நிலை உள்ளது. வெளி நாடுகளில் முதலீடு செய்ய அமைச்சர்கள் சென்றுள்ளனர்.

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக தேர்தல் வாக்குறு திகள் நிறைவேற்றப்பட வில்லை.

முக்கியமாக நியாய விலைக் கடைகள் திறக் கப்படவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியி லிருந்து அதிமுக வெளி யேறியுள்ளது.

அதிமுக வெளியேறி யதை பற்றி கேட்டால், கூட்டணி பலமாக உள் ளதாக ரங்கசாமி சொல் கிறார். இந்த ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நமக்கு (காங்கிரஸ்) சாத கமாக இருக்கும்" என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment