சென்னை, அக் 25- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமத்துவத்தை எதிர்க்கும் ஸநாதனத்தை ஒழிப்போம் என்று கூறியதை இனப்படுகொலை நடத்த தூண்டினார் என்று செய்தி வெளியிட்ட வழக்கில் விசாரணைக்கு வருமாறு ஆங்கில தொலைக்காட்சி ஆசிரியருக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸநாதன தர்மம் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து ஆங்கில தொலைக்காட்சியின் ஆலோசனை ஆசிரியர் அபிஜித் மஜும்தார் கட்டுரை எழுதியிருந்தார்.
அதில், உதயநிதி ஸ்டாலின் சொல்லாத சொற்களை தானகவே கற்பனையாக சேர்த்து உதயநிதி ஸ்டாலின் மேடையில் இனப்படுகொலை செய்ய தூண்டி விட்டுள்ளார்.
ஸநாதனிகளை ஒழித்துக்காட்டும் அவரது பேச்சு நாட்டில் உள்ள ஹிந்துக்களை கொலை செய்ய தூண்டும் சொல் ஆகும் என்று எல்லாம் தானாகவே கற்பனையாக சேர்த்து செய்தி வெளியிட்டார் என்பதால் சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அபிஜித் மஜும்தார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நவம்பர் 8ஆம் தேதி, சென்னை சைபர் கிரைம் காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment