மதுரை அக்.2 தொல்லியல் துறை சார்பில் அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையாக வைகை கீழடி நாகரிகம் விளங்கி இருப்பதாக தெரியவந்தது.
இதையடுத்து கீழடி மற்றும் அருகில் உள்ள கொந்தகை, மணலூர் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 9-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கீழடியில் 12 குழிகளும், கொந்தகையில் 2 குழிகளும் தோண்டப்பட்டு தொல்லியல் பணிகள் நடந்தது. அண்மையில் கீழடி அகழாய்வு குறித்து ஆவணம் தயாரிக்கப்பட்டு ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் 9-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் முடி வடைய உள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பணிகள் முடிந்த பின் தோண்டப்பட்ட குழிகள் பாதுகாப்புடன் மூடப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment