அண்ணா பல்கலை. வளாகத்தில் அப்துல் கலாம் சிலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 16, 2023

அண்ணா பல்கலை. வளாகத்தில் அப்துல் கலாம் சிலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, அக்.16- சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத் தில் நிறுவப்பட்டுள்ள மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின்  சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் பிறந்த நாளான 15.10.2023 அன்று செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சென்னை, கிண்டி, அண்ணா பல் கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மேனாள் குடி யரசுத் தலைவர் அப்துல் கலாமின் சிலையை திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அரும் பாடுபட்டு தமிழ்நாட்டுக்குப் பெரு மைத் தேடித்தந்த அறிஞர் பெரு மக்கள், சமூகநீதி, விடுதலை உணர் வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர் கள், இசை மேதைகள், தமிழ் நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங் கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்துக்கு அவர்களின் பங்களிப்பை பெரு மைப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், உருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில், 2021-2022ஆம் ஆண்டுக்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக் கையில், இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பெரும் வழிகாட்டியாகவும் திகழ்ந்த மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலா முக்கு சென்னை, அண்ணா பல் கலைக்கழக வளாகத்தில் உருவச் சிலை அமைக்கப்படும் என்று அறி விக்கப்பட்டது. 1931-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15-ஆம் நாள், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வ ரத்தில் ஜைனுலாப்தீன் மற்றும் ஆஷி யம்மா ஆகியோருக்கு மகனாக பிறந் தார். ராமேஸ்வரத்தில் பள்ளிப் படிப்பை முடித்த அவர், திருச்சி ராப்பள்ளியிலுள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பட்டப்படிப்பு பயின்றார். 

1955ஆம் ஆண்டு தன்னுடைய விண்வெளி பொறியியல் படிப்பை சென்னையிலுள்ள எம்அய்டியில் தொடங்கிய அவர், பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

ஒன்றிய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வானூர்தி அபிவிருத் திப் பிரிவில் விஞ்ஞானியாக தன் னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கியவர், பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணி களைத் தொடர்ந்து, துணைக் கோள் ஏவுகணைக் குழுவில் (SLV)  செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார்.

மேலும், SLV -III  ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார்.

அவரது இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி ஒன்றிய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் பெருமைமிகு விரு தான “பத்ம பூஷன்” விருது வழங்கி கவுரவித்தது. 1963ஆம் ஆண்டு முதல் 1983ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1998 ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனை யில் முக்கிய பங்காற்றியுள்ளார். 

“இந்தியாவின் ஏவுகணை நாய கன்” என்றும் “அணுசக்தி நாயகன்” என்றும் அவர் போற்றப்பட் டார்.இந்தியாவின் 11ஆவது குடி யரசுத் தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002இல் அப்துல் கலாம் பதவியேற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் குடியரசுத்  தலைவர்” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.

மாணவர்களிடம் மிகுந்த அன்பு கொண்ட அப்துல் கலாம், “கனவு காணுங்கள், அந்தக் கனவு உறக்கத்தில் வரும் கனவாக இருக் கக் கூடாது. உறக்கத்தை விரட்டும் கனவாக இருக்க வேண்டும்” என்று மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டினார்.

அப்துல் கலாம் "அக்னி சிறகு கள்", "இந்தியா 2020" போன்ற பல்வேறு நூல்களை எழுதியுள் ளார். மேலும், 1990-ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருது, 1997-ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது போன்ற பல்வேறு விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர் ஆவார்.

இத்தகைய பல்வேறு சிறப்பு களை கொண்ட அப்துல் கலா முக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், சென்னை, கிண்டி, அண்ணா பல் கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அவரது உருவச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment