கொடுங்கையூர், அக். 2- தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 17.9.2023 அன்று காலை 7.30 மணிக்கு வடசென்னை மாவட் டம் - கொடுங்கையூர் கழகம் சார்பில் சிறப்பாகக் கொண்டா டப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த, தலைமைக் கழக அமைப் பாளர் தே.செ.கோபால், தங்க.தன லட்சுமி ஆகியோர் கொடுங்கை
யூர் காமராசர் சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.
1ஆவது வட்ட தி.மு.க. மேனாள் பகுதி பிரதிநிதியும், கொடுங்கையூர் கழகத் தலைவர் கோ.தங்கமணி யின் தந்தையாருமான து.கோவிந்த சாமி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி - பள்ளி சிறார்களுக்குரிய நோட்டுப் புத்தகம், பேனா, பென் சில்களையும் வழங்கினார்.
வடசென்னை மாவட்ட காப் பாளர் கி.இராமலிங்கம், மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், மாவட்ட இளைஞரணித் தலைவர் நா. பார்த்திபன், செயலாளர் சு.அர விந்த், எல்.அய்.சி பிற்படுத்தப்பட் டோர் நலச் சங்கத்தின் கோ.சுந் தரமூர்த்தி, மாதவரம் கழக அமைப் பாளர் சி.வாசு, வ.தமிழ்ச்செல்வன், வ.கலைச்செல் வன், அ.செந்தமிழ்ச் செல்வன், கோ. அன்பரசு, கோ. தம்பி பிரபாகரன், அ.புகழேந்தி மற்றும் பல கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில், 34ஆவது வட்ட தி.மு.க. சார்பில், பெரம்பூர் வடக்கு பகுதி தி.மு.க. செயலாளர் அ.முருகன், வட்ட செயலாளர் க.இராசு, இளைஞரணி அமைப் பாளர் ஜம் புலி எச்.இராஜ்குமார், மாவட்ட தி.மு.க. பிரதிநிதி எஸ்.டி. சேகர் வர்மா, அவைத் தலைவர் பி.யுவ நாதன், பகுதி பிரதிநிதி டி.குமரேசன், ஏ.அன்வர் பாஷா, இலக்கிய அணி மாவட்ட அமைப் பாளர் தி.மு.க., வி.சி.க. கட்சிகளைச் சேர்ந்த தோழர் கள் பங்கேற்றனர்.
நிகழ்வில் தந்தை பெரியார் பிறந்த நாள் - சமூகநீதி நாள் - சமத் துவ உறுதிமொழி ஏற்கப்பட்டது.
No comments:
Post a Comment