கரீம்நகர், அக்.11 தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டம் சென்னூர் நகரைச் சேர்ந்த தாசரிமது பல மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.
இதனால் அவர் உடலில் 'தீய சக்தி' சேர்ந்துள்ளதால் அது அவர் உடலில் இருந்து வெளியேறும் வரை தாசரிமது உடல் நிலை சரியாகாது என சாமியார் கூறி உள்ளார்.
யாருக்கும் தெரியாமல்...
இதனால் 'தீய சக்தி'யை வெளியேற்ற மாந்திரீக பூஜை செய்ய வேண்டும் என கூறியதால், மது குடும்பத்தினர் பூஜை செய்ய ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து கோதாவரி ஆற்றின் அருகே மதுவை அழைத்துச் சென்று 'மாந்திரிக பூஜை' என்ற பெயரில் நிர்வாணப் படுத்தி, அடித்துக் கொடுமைப்படுத்திய நிலையில், மது உயிரிழந்தார். இதனால் யாருக்கும் தெரியாமல் இறுதிச் சடங்கு செய்ய சாமியார் திட்டமிட்டார். ஆனால், சாமியார் பூஜை செய்தபோது உடன் சென்ற மது உறவினர் ஒருவர், ரகசியமாக கைப்பேசியில் எடுத்த காட்சிப் பதிவை காவல்துறையினருக்கு அனுப்பினார்.
இந்தத் தகவல் காவல்துறையினருக்கு கிடைத்ததும் உடனடியாக காவல்துறையினர், மது தகனம் செய்யப் படுவதை நிறுத்தி, உடற்கூராய்விற்காக சென்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாமியாரிடம் காவல்துறையினர் விசாரணை
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சாமியார் உடன் இருந்தவர்கள் மற்றும் மது குடும் பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment