- மயிலாடன்
கே: பல வருடங்களுக்கு முன்னர் துக்ளக் கேள்வி - பதில் பகுதியில் கீழ்க்கண்டபடி ஒரு கேள்வி - பதில் இடம் பெற்றிருந்தது. கே - சொல்லித் தெரிவது எது? சொல்லாமல் தெரிவது எது? சொல்லியும் தெரியாதது எது?
பதில்: சொல்லித் தெரிவது ஆல் இண்டியா ரேடியோ, சொல்லாமல் தெரிவது - வாத்திய இசை, சொல்லியும் தெரியாதது - அறவுரை.
அதே கேள்விக்கு இன்றைய துக்ளக்கின் பதில் என்ன?
ப: சொல்லித் தெரிவது - மத அரசியல். சொல்லாமல் தெரிவது - ஜாதி அரசியல். சொல்லியும் தெரியாதது - மதச் சார்பற்ற அரசியல்.
- துக்ளக் - 13.9.2023 - பக்கம் 11
நமது பதிலடி
அப்படியா சேதி.
சொல்லித் தெரிவது மத அரசியலாம் - அப்படியா? மனுதர்மத்திலும், கீதையிலும் சொல்லப்பட்டவைகளை அப்படியே உள்ளபடியே சொல்லித் திரிகிறார்களா?
அப்படியானால், பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள் (BORN OUT OF WOMB OF SIN) (கீதை அத்தியாயம் 19, சுலோகம் 44) என்று அவாளின் பகவான் கிருஷ்ணன் அருளியிருக்கிறாரே - அதை சொல்லி தான் மத அரசியல் நடத்துகிறார்களா?
சூத்திரன் என்றால் விபசாரி மகன் என்று மனுதர்மம் கூறுகிறதே - அதனை மறைக்காமல் சொல்லிதான் பிரச்சாரம் செய்கிறார்களா?
சொல்லாமல் தெரிவது ஜாதி அரசியலாம் - ஆமாம் பூணூல் அணிவது எந்த வகையைச் சேர்ந்ததாம்?
சொல்லியும் தெரியாதது மதச்சார்பற்ற அரசியலாம்.
அரசமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது மதச்சார்பின்மை (SECULAR) என்று சொல்லி இருந்தும், அதனைப் பொருட்படுத்தாமலும் - அதற்கு நேர் எதிராக நடந்து கொள்ளும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசை இப்படிக் குத்திக் காட்டுகிறாரா திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள்.
அடுத்த மதக்காரர்களின் வழிபாட்டுத் தலத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் பிரதமரே முண்டாசு கட்டி ராமன் கோயிலைக் கட்ட முஸ்தீபு காட்டுகிறாரே - அதனை நையாண்டி செய்கிறார்களா?
அடுத்த தேர்தலில் பி.ஜே.பி. ஜெயிக்கப் போவதில்லை. ஜெயித்தாலும் மோடி பிரதமர் இல்லை என்று முடிவு செய்திருப்பது குருமூர்த்திக்குத் தெரியாமல் போயிருக்கும்?
No comments:
Post a Comment