தஞ்சை, அக். 18- 15.10.2023, ஞாயிற்று கிழமை காலை 11 மணியளில் கிளாசிக் மகாலில், பகுத்தறிவாளர் கழக தஞ்சை மாவட்ட செயலாளர் பாவலர் பொன்னரசு துணைவியா ரும், கழக இளைஞரணி தோழர்கள் இரா.கபிலன், இரா.பேகன் ஆகி யோரது தாயாருமான மறைந்த சுயமரியாதைச் சுடரொளி ஆசிரியர் பா.மலர்க்கொடியின் படத்திறப்பு நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ச.அழகிரி தலை மையேற்று உரையாற்றினார். மாநில பகுத்தறிவாளர் கழக துணை தலை வர் கோபு.பழனிவேல், தஞ்சை தனி வட்டாட்சியர் நி.ரகுராமன் ஆகி யோர் முன்னிலையேற்று உரையாற் றினர். தஞ்சை மாவட்ட கழக தலை வர் மூத்த வழக்குரைஞர் சி.அமர்சிங் அம்மையாரது படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற் றினார்.
ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் மா.லெட்சுமணசாமி, கோவிலூர் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி, சித்திரக்குடி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சகுந்தலா, தமி ழக ஆசிரியர் கூட்டணி பொறுப் பாளர் சூசை ஆரோக்கியராஜ், வி. ஆர்.எஸ்.எஸ். நகர் சங்கத் தலைவர் சுகுமார், மண்ணாங்காடு கஜேந்தி ரன், புலவர்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்மோகன், ஆசிரியர் மற்றும் காப்பாளர் நல சங்க தலை வர் சண்முகையா, ஆசிரியர் மற்றும் காப்பாளர் நல சங்க செயலாளர் ஸ்டாலின், தொடக்கப்பள்ளி ஆசிரி யர் மன்ற மாவட்டச் செயலாளர் இ.சத்தியசீலன், பட்டுக்கோட்டை கழக மாவட்ட தலைவர் பெ.வீரை யன், கழக மாநில கிராம பிரச்சார அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் ஆகியோர் நினை வேந்தல் உரையாற்றினர். மறைந்த அம்மையார் மலர்கொடி அவர் களின் இணையர் ஆசிரியர் பாவலர் பொன்னரசு, இரங்கற்பா வாசித்து தன்னுடைய நினைவுவேந்தல் உரை யாற்றினார்.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முனைவர் வே.ராஜ வேல், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ச.சந்துரு,மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் செ. ஏகாம்பரம், மாநகர செயலாளர் கரந்தை அ.டேவிட், மகளிர் அணி பொறுப்பாளர் அ.கலைச்செல்வி, மருத்துவக் கல்லூரி பகுதி செயலா ளர் பா .விஜயகுமார், பூதலூர் ஒன்றிய தலைவர் அல்லூர் இரா.பாலு, பூதலூர் ஒன்றிய செயலாளர் இரா.புகழேந்தி, தஞ்சை ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் ஆட்டோ செந்தில், மகளிர் அணி தோழர் ஏ.பாக்கியம், ரெட்டிபாளை யம் முருகேசன், இளவரசன் மற்றும் கழகத் தோழர்கள் உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டு அம் மையாருக்கு வீர வணக்கத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்த னர்.
No comments:
Post a Comment