பெரியார் மணியம்மை அறிவியல் - தொழில்நுட்ப நிறுவனத்தில் "நெகிழி மாசுபாட்டிற்கு தீர்வு" - விழிப்புணர்வு நிகழ்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 1, 2023

பெரியார் மணியம்மை அறிவியல் - தொழில்நுட்ப நிறுவனத்தில் "நெகிழி மாசுபாட்டிற்கு தீர்வு" - விழிப்புணர்வு நிகழ்வு

வல்லம், அக். 1- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் சமூகப் பணித்துறையின் சார் பாக சுற்றுச்சூழல் பாது காப்பு குழு, மருதுபாண் டியர் கல்லூரி மற்றும் தஞ்சாவூர் மாவட்ட வனத் துறையுடன் இணைந்து ""நெகிழி மாசு பாட்டிற்கான தீர்வு"" குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

இந்நிகழ்வில் சமூகப் பணித்துறை முதலா மாண்டு மாணவர் ச.வீர மணி வரவேற்புரை ஆற் றினார். மருது பாண்டியர் கல்லூரியின் முதல்வர் முனைவர் கே.விஜயா தலைமையுரை ஆற்றினார். அவர் தமது உரையில் ""நெகிழி மாசு பாட்டிற்கான தீர்வு"" குறித்த விழிப்புணர்வு செயல்பாடுகளை எளிய முறையில் உரையாற்றினார். முனைவர் ஞானராஜ் உதவிப் பேராசிரியர் சமூகப்பணித் துறையின் செயல்பாடுகள் மற்றும் சமூகப் பணித்துறை மாணவ, மாணவரின் களப் பணி குறித்தும் விளக்கமளித் தார்.

தஞ்சாவூர் மாவட்ட வனத்துறை வனவர் அதி காரி டி.இளஞ்செழியன் சிறப்புரை ஆற்றினார். அவர் தமது உரையில், 

நெகிழி பயன் பாட்டை எப்படி தவிர்க்க வேண்டும் என் றும், நெகிழிக்கான மாற் றுப் பொருள் என்ன  என்பது குறித்தும், நெகிழி கழிவுப் பொருள்களை எவ் வாறு மறுசுழற்சி செய்வது போன்ற அறிவுரைகளை வழங்கினார். 

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது 80 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்வு முதலாமாண்டு சமூகப் பணி துறையின் சுற்று சூழல் பாதுகாப்பு குழு ஒருங்கிணைத்தனர்.  

இறுதியாக த.வைஷ் ணவி முதலாம் ஆண்டு சமூகப்பணித்துறை மாணவி நன்றியுரை வழங்கினார்.

No comments:

Post a Comment